சமையல் குறிப்புகள்
சத்தான காலை டிபன் முட்டை சாண்ட்விச்
தேவையான பொருட்கள்
- முட்டைகள் – 2
- கோதுமை பிரெட் துண்டுகள் – 2
- மிளகு தூள் – ½ தேக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- பால் – சிறிதளவு
- வெண்ணெய் – 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை :
- கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் பால், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது வெண்ணெயை போட்டு சூடானதும் கலக்கி வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி மென்மையாக கிளறவும்.
- முட்டை கலவை கெட்டியாகி உதிரியாக வந்ததும் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும்.
- ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு சூடானதும் இரண்டு கோதுமை பிரெட் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- தட்டில் பிரெட்டை வைத்து அதன் மீது முட்டை கலவையை சேர்த்து இன்னொரு பிரட்டை வைத்து மூடி வைத்து பரிமாறவும்.
- சுவையான முட்டை சாண்ட்விச் தயார்.