இன்றைய காலத்தில் யோகாவின் அவசியம்
இன்றைய பரபரப்பான போட்டிகள் நிரம்பிய உலகில் டென்ஷன், பதட்டம், கவலையில்லாமல் வாழ முடியாது. இந்த மன அழுத்தத்தினால் உடலில் உள்ள தைமஸ் சுரப்பி, அட்ரினல் சுரப்பி, கணையம் போன்ற சுரப்பிகள் ஒழுங்காக சுரப்பதில்லை. அதனால் பல நோய்கள் வருகிறது. யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி தினமும் செய்தால்தான் கவலையினால், டென்ஷனால் உடலில் நாளமில்லா சுரப்பியில் ஏற்பட்ட மாறுபாடுகள் உடன் சரி செய்து சரியாக சுரக்கும்.
யோகாசன முத்திரைகளின் நன்மைகள்
உடல் உள் உறுப்புக்கள் குறிப்பாக இதயம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் நன்றாக இயங்கும்.
உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளான பிட்யூட்டர், பீனியல், தைராய்டு, பாரா தைராய்டு, மைதஸ், கணையம், அட்ரினல், கோணாடு சுரப்பிகள் சரியாக சுரக்கும்.
அதிக உடல் எடை குறையும். நீரிழிவு, இரத்த அழுத்தம் முழுமையாக நீங்கும். மூட்டுவலி, முதுகு வலி, மன அழுத்தம் நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சினை, நீர்க்கட்டி போன்றவை நீங்கும். சுகப்பிரசவம் உண்டாகும்.
* உடலில் கழிவுகள் சரியாக வெளியேறும். அதனால் கேன்சர் வராமல் தடுக்கப்படும்.
* படிக்கின்ற மாணவர்கள் நேர்முகமான சிந்த னையில் வாழலாம். ஞாபக சக்தி அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ஆண்மைக் கோளாறு நீக்கும். புத்திரபாக்கியம் கிடைக்கும்.
* நரம்பு மண்டலங்கள் நன்றாக இயங்கும் என்றும் இளமையுடன் சுறுசுறுப்பாக வாழலாம்.
* அதிகமான உடல் எடை பக்கவிளைவின்றி குறையும்.
* எந்த ஒரு காய்ச்சலும் வராது. காரணம் யோகாசனம் செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
* தினமும் காலை, மாலை உடலில் மலம் வெளியேற வேண்டும். யோகாசனம் செய்தால் தான் உடலில் மலம் சரியாக வெளியேறும். இல்லையெனில் கழிவுகள் வெளியேறாமல், சாதாரணக் கழிவுகளாக தங்கி, பின் அசாதாரண கழிவுகளாகி பின் இரசாயனக் கழிவுகளாகி, பின் கட்டிகளாகி அதுவே கேன்சராக உருவாகின்றது. யோகாசனம் செய்தால் கேன்சர் வராமல் தவிர்க்கலாம்.
யோகாசன விதிகள்
யோகாசனங்களை முறைப்படி தக்க குருவிடம் பயில வேண்டும். தினமும் காலை 4 முதல் 7 மணிக்குள், மாலை 5 முதல் 7 மணிக்குள் பயிலலாம். தரையில் ஒரு மேட் விரித்து நிதானமாக பயிலவும். ஆண்கள் டீ-சர்ட், பனியன், விளையாட்டு உடை அணிந்தும், பெண்கள் சுடிதார் அல்லது விளையாட்டு உடை அணிந்தும் பயிலலாம். சாப்பிட்டால் மூன்று மணி நேர இடைவெளி வேண்டும். பெண்கள் மாதவிடாய் காலத்தில் நான்கு நாட்கள் ஆசனம் செய்யக்கூடாது.
குழந்தை உண்டானால் பெண்கள் இரண்டு மாதங்கள் பயிற்சி செய்யலாம். அறுவை சிகிச்சை செய்திருந்தாலோ, வேறு ஏதாவது பெரிய வியாதியிருந்தாலோ யோகா ஆசிரியரின் நேரடி பார்வையில் பயில வேண்டும். அசனம் என்றால் உணவு. ஆசனம் என்றால் நிலையான இருக்கை. அசனம் பாதி, ஆசனம் பாதி. அதாவது பசிக்கும் பொழுது பசியறிந்து உண்ண வேண்டும். அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று போக இடம் வேண்டும்.
“ஆசனம் செய்வோம், ஆரோக்கியமாய் வாழ்வோம்”. முத்திரை செய்வோம், மாத்திரை தவிர்ப்போம்”. ஆரோக்கியம் நம் கையில். கை விரல் முத்திரையே முழுமையான ஆரோக்கியம் தரும்.