அழகு..அழகு..புதியவை
இயற்கையான முறையில் முடி வளர்ச்சியை அதிகரிக்கும் எண்ணெய் தயாரிப்பு!
முடியின் வளர்ச்சியை மேம்படுத்த எத்தனையோ வழிகளை முயற்சிக்கிறோம். தலை முடிக்கு இயற்கையான முறையில் பராமரிப்பை அளிப்பதால் பல பயன்கள் உள்ளது. மிகச்சிறந்த பலன்களை அளித்திடும் இயற்கையான சிகிச்சைகள் பல உள்ளது. அதில் முக்கிய முறை எண்ணெய் சிகிச்சை முறையாகும்.
தேவையான மூலிகைகள்:
தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர், மருதாணி – 10 கிராம், செம்பருத்தி – 10 கிராம், கறிவேப்பிலை – 10 கிராம், ஆவாரம் பூ – 10 கிராம், கரிசலாங்கண்ணி – 10 கிராம், வெட்டிவேர் – 5 கிராம், சோற்றுக் கற்றாழை – 50 கிராம்.
செய்முறை:
மருதாணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, ஆவாரம் பூ, கரிசலாங்கண்ணி, சோற்றுக் கற்றாழை இவற்றை ஒன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கடாயில் 1 லிட்டர் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சிறிது சூடேறியதும் அரைத்து வைத்த மூலிகைகளை போட்டு மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு வெட்டிவேர் சேர்த்து எண்ணெய் பொன்னிறமாக மாறும்வரை கொதிக்க வைத்து இறக்கி ஆறவைத்து பிறகு வடிகட்டி 2 நட்களுக்கு பிறகு பயன்படுத்தவும்.
எண்ணெய்யின் பயன்கள்:
தினமும் தலைக்கு தேய்த்துவர தலமுடி உதிர்வதை தடுக்கும். முடி நன்றாக செழித்து வளரும். கண் எரிச்சல் தீரும். வாரம் ஒருமுறை தேய்த்து குளிக்க உடல் சூட்டை தணிக்கும். இரவு பாதங்களில் தேய்க்க தூக்கம் நன்றாக வரும்.