சமையல் குறிப்புகள்
சத்தான ஸ்நாக்ஸ் ராஜ்மா கட்லெட்
தேவையான பொருட்கள் :
- ராஜ்மா – 2 கப்
- மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்,
- கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்,
- ஓமம் – ஒரு டீஸ்பூன்,
- வெங்காயம் – 1
- இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்,
- வதக்கிய பெரிய வெள்ளை வெங்காயம் – அரை கப்,
- எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
- பொடித்த முந்திரி – அரை கப்,
- வெள்ளை மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
- புதினா – சிறிதளவு
- பிரெட் கிரம்ப்ஸ் – ஒரு கப்
- எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு,
செய்முறை :
- வெங்காயம், புதினாவை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
- ராஜ்மாவை 10-12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து வேக வைத்துக் கொள்ளவும்.
- வேகவைத்த ராஜ்மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், ஓமம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் விழுதாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதுடன் வெங்காயம், பொடித்த முந்திரி, வெள்ளை மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, புதினாவைச் சேர்த்துக் கலந்து பிசைந்து, விருப்பமான வடிவில் தட்டி வைக்கவும்.
- இதை பிரெட் கிரம்ப்ஸில் புரட்டி எடுத்து வைக்கவும்.
- கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் செய்து வைத்த கட்லெட்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
- சூப்பரான ராஜ்மா கட்லெட் ரெடி.