சமையல் குறிப்புகள்
இட்லிக்கு அருமையான கும்பகோணம் கொஸ்து
கும்பகோணத்தில் இரண்டு விஷயங்கள் பேமஸ். ஒன்று டிகிரி காபி. மற்றொன்று கும்பகோண கொஸ்துவின் சுவை. இன்று இந்த கொஸ்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- பாசிப் பருப்பு – 1 கப்
- பச்சைப் பயறு – 2 கரண்டி
- நிலக்கடலை – 2 கரண்டி
- கொள்ளு – 2 கரண்டி
- தக்காளி – 2
- பச்சை மிளகாய் – 4
- பச்சை கத்தரிக்காய் – 2
- காய்ந்த மிளகாய் – 2
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை – சிறிதளவு
- சீரகம் – 1/4 தேக்கரண்டி
- சாம்பார் பொடி, உப்பு – தேவையான அளவு
செய்முறை :
- தக்காளி, கத்தரிக்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- பயறு வகைகளை முதல் நாளே ஊறவைத்து முளைகட்ட வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
- இந்த பருப்பு வகைகளை குக்கரில் போட்டு வேக வைத்து கொள்ளவும்.
- வெந்த பருப்புடன் தக்காளி, பச்சை மிளகாய், கத்தரிக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து குக்கரை மூடி 1 விசில் போட்டு இறக்கவும்.
- வெந்த கலவையை மத்தால் மசித்து கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் விட்டு சூடானதும் அதில் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொஸ்துவில் சேர்த்தால் சுவையான கும்பகோணம் கொஸ்து தயார்.
- இதை இட்லி, தோசை, சப்பாத்தி ஆகியவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம்.