சமையல் குறிப்புகள்

மட்டன் கஞ்சி செய்வது எப்படி?

மட்டன் சேர்த்து செய்யும் கஞ்சி அருமையாக இருக்கும். இன்று இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

  • அரிசி – 2 கப்
  • வறுத்த சிறு பருப்பு – 1 கப்
  • மட்டன் – அரை கிலோ
  • பெ.வெங்காயம் – 3
  • கேரட் – 4
  • உருளைக்கிழங்கு – 2
  • பட்டாணி – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • மசாலா தூள் – தேவைக்கு
  • மிளகாய் தூள் – தேவையான அளவு
  • தக்காளி – 4
  • பட்டை, ஏலக்காய் – சிறிதளவு
  • இஞ்சி, பூண்டு விழுது – சிறிதளவு

செய்முறை:

  • பெரிய வெங்காயம், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • மட்டனை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • அரிசியை சிறிதுநேரம் ஊற வைத்துக்கொள்ளவும்.
  • குக்கரில் இறைச்சி, மிளகாய்தூள், மஞ்சள் தூள், இஞ்சி, பூண்டு விழுது, உருளைக்கிழங்கு, பட்டாணி, தக்காளி, கேரட், உப்பு, போதுமான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  • நன்கு வெந்ததும் குக்கரை திறந்து அரிசி, பருப்பு சேர்த்து போதுமான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
  • நன்கு வெந்ததும் ஆற வைத்து மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
  • வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும் ஏலக்காய், கருவா பட்டை, வெங்காயம், மசாலா தூள் சேர்த்து வதக்கி அரைத்துவைத்த கலவையில் சேர்க்கவும்.
  • பின்னர் அதனை அடுப்பில் வைத்து தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடலாம்.
  • சுவையான மட்டன் கஞ்சி ரெடி.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker