சமையல் குறிப்புகள்
இரும்புசத்து நிறைந்த முடக்கத்தான் சட்னி
முடக்கத்தான் கீரையில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகும். இன்று கீரையை வைத்து சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
- முடக்கத்தான் கீரை – 1 கட்டு
- நறுக்கிய கொத்தமல்லி தழை - 1 கப்
- தயிர் - ½ கப்
- சின்னவெங்காயம் – 8
- நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
- கடுகு - ½ ஸ்பூன்
- உளுந்து பருப்பு – 2 ஸ்பூன்
- கடலைபருப்பு - 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- புளி கரைசல் – 1 ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
செய்முறை:
- முடக்கத்தான் கீரையை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
- கொத்தமல்லியை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சின்ன வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் போட்டு லேசாக வதக்கி இறக்கவும்.
- பின்னர் அதனை மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
- அதனுடன் வல்லாரை கீரையையும், கொத்தமல்லி, புளி கரைசலையும் சேர்த்து அரைக்கவும்.
- இஞ்சி, தயிர், உப்பு போன்றவைகளை அத்துடன் சேர்த்து அரைத்து கலந்து சாப்பிடலாம்.
ஆரோக்கிய பலன்:
இதில் கால்சியம், இரும்புசத்து நிறைந்துள்ளது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாகும். இந்த சட்னியை மாதம் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடலாம்.