சமையல் குறிப்புகள்
செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்ஷேக்
இரத்த அணுக்களை உடல் அதிகரிக்க கூடிய திறன் செவ்வாழைக்கு உண்டு. மேலும் உடல் சூட்டையும் குறைக்கும். இன்று செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்ஷேக் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- செவ்வாழை : 1 (கனிந்தது)
- பேரீச்சம்பழம் : 5
- வால்நட் : 3
- குளிர்ந்த பால் : 400 மி.லி.
செய்முறை :
- செவ்வாழை பழத்தை தோல் நீக்கி சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அதனுடன் கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம், வால்நட் பருப்பு மற்றும் பால் சேர்த்து மிக்ஸில் நுரை வரும் வரை அரைத்துக் கொள்ளவும்.
- கூடுதல் சுவைக்குத் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
- புளிக்காத தயிரில் செவ்வாழை ஸ்மூதி செய்து சாப்பிடலாம்.
- செவ்வாழை பேரீச்சம் பழ மில்க்ஷேக் ரெடி.