வெறும் வயிற்றில் இந்த பொருட்களை சாப்பிட்டால் ஆபத்து
* காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காபி அல்லது டீ குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. ஆனால், வெறும் வயிற்றில் இவற்றை குடித்தால், அமில தன்மை வயிற்றில் அதிகரித்து செரிமான பிரச்சினை, மலச்சிக்கல், வாந்தி ஆகிய பின் விளைவுகளை ஏற்படும். எனவே, இதற்கு பதிலாக டீ அல்லது காபியுடன் ஏதேனும் சேர்த்து சாப்பிடுவது சற்று நல்லது.
* உடற்பயிற்சியை வெறும் வயிற்றில் காலை நேரத்தில் செய்வதால் உடல் எடை சட்டென குறைந்து விடும் என பலர் எண்ணுகின்றனர். ஆனால், இது முற்றிலும் தவறான கருத்தாகும். இந்த பயிற்சி கொழுப்புகளை குறைக்காமல் தசைகளையே குறைக்கும். ஆதலால், வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யாமல் ஏதேனும் சிறிய அளவில் சாப்பிட்டு விட்டு பயிற்சியை தொடங்குங்கள்.
* வெறும் வயிற்றில் சோடாக்கள் நிறைந்த பானங்களையோ, உணவுகளையோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை குடல் பகுதியில் அதிக எரிச்சல், வாந்தியை ஏற்படுத்தும். பல நாட்கள் இது தொடர்ந்தால் குடல் புண், உடல் எடை கூடுதல், பசியின்மை போன்ற பல பக்க விளைவுகள் ஏற்படும்.
* காலையில் எழுந்ததும் உணவின் மீது உள்ள காதலால் காரசாரமான உணவுகளை சாப்பிடாதீர்கள். காலை உணவில் காரசாரமான உணவுகளை சாப்பிட்டால் வயிற்றில் அமில தன்மை அதிகரிக்க கூடும். பிறகு குடல் புண்கள் ஏற்பட்டு அதிக வலியை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* நீங்கள் வெறும் வயிற்றில் பாராசிட்டமால், ஆஸ்பிரின் போன்ற மாத்திரைகளை எடுத்து கொள்ள கூடாது. இவ்வாறு செய்வதால் இவற்றின் வீரியம் அதிகரிக்க கூடும். இவை மலத்தில் இரத்த போக்கை ஏற்படுத்தி பல வித பாதிப்புகளை தருமாம். ஆதலால், மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுத்து கொள்ளாதீர்கள்.
* நவீன நாகரீகம் என்கிற பெயரில் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் மது அருந்தும் பழக்கம் இப்போதெல்லாம் பரவலாக எல்லோரிடமும் தொற்றி வருகின்ற ஒரு கலாச்சாரமாக உள்ளது. ஆனால், வெறும் வயிற்றில் மது அருந்தினால் கல்லீரல், இதயம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் சிதைவடையும்.