ஆரோக்கியம்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

குழந்தைகள் நன்றாக சாப்பிட்டும் எடை கூடாமல் இருக்கக் காரணம்

நன்றாக சாப்பிடும் குழந்தைகள் எடை அதிகரிக்காமல் ஒல்லியாகவே இருப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. குழந்தையை பத்திரமாகப் பெற்றெடுப்பதில் இருந்து அதன் பின் அவர்களைப் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வளர்ப்பது என அவர்களின் கவலைகள் நீண்டு கொண்டே செல்லும்.

அம்மாக்களுக்கு இருக்கும் முக்கியமான கவலைகளில் ஒன்று குழந்தைகளின் எடை பற்றியது தான். ஏனெனில் குறைவான எடை அவர்களின் ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறி ஆகும்.  நீங்கள் என்ன தான் ஆரோக்கியமான உணவுகளைக் கொடுத்தாலும் குழந்தைகளின் எடை அதிகரிக்காமல் இருக்க சில காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

குழந்தைகள் எடை அதிகரிக்காமல் இருக்க முக்கியக் காரணம் போதுமான அளவு கலோரிகள் எடுத்துக் கொள்ளாதது தான். குழந்தைகள் பல்வேறு காரணங்களால் சாப்பாடு மீது வெறுப்பு காட்டுவதாலும், பெற்றோர்கள் அதனைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதனாலும் குழந்தைகளுக்குத் தேவையான கலோரிகள் கிடைப்பதில்லை. குறிப்பாகக் குழந்தைகள் தாய்ப்பால் சரியாகக் குடிக்காமல் இருப்பது தான் முக்கிய காரணம்.

சில சமயம் குழந்தைகள் அதிகப்படியான வாந்தி பிரச்சினையால் போதுமான உணவை எடுத்துக் கொள்வதில்லை. இதற்குக் காரணம் குழந்தைகளுக்கு ஏற்படும் அமிலப் பிரச்சினைகள் ஆகும். இது குழந்தைகளின் தசைகளை பலவீனமாக்குவதோடு அவர்கள் எடையிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கணையச் செயல்பாடு சரியாக இல்லாத குழந்தைகளின் எடை அதிகரிக்க வாய்ப்பு இல்லை. இது போன்ற சிக்கல்களால் தளர்வான தசைகள், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சில நோய்களும் குழந்தைகளின் எடை அதிகரிப்பதைத் தடுக்கின்றன. செலியாக் அல்லது க்ரோன் போன்ற குடல் நோய்கள் குழந்தைக்கு இருக்கும் போது அது எடை அதிகரிப்பைத் தடுக்கும்.

சில குழந்தைகள் சுறுசுறுப்பாக இருப்பதே அவர்கள் எடை அதிகரிப்பைத் தடுக்கும். கலோரிகள் அதிகம் எரிக்கப்படும் போது குழந்தை களின் எடை அதிகரிக்காது.

ஹைப்பர் ஆக்டிவ் ஆக இருக்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஒல்லியாகத் தான் இருப்பார்கள்.

சில சமயம் சிறுநீரகக் கோளாறுகள் கூட குழந்தையின் எடையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.

சிறுநீரகக் கற்கள் மற்றும் கோளாறுகளால், எடை மட்டுமின்றி குழந்தைகளின் மற்ற வளர்ச்சி களிலும் தடங்கல் ஏற்படும்.

குழந்தைகளின் மரபணுக்களும் அவர்களின் எடையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவர்களின் மரபணுக்களில் உள்ள சில மூலக்கூறுகள் அவர்களின் எடை அதிகரிப்பைத் தடுக்கக் கூடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker