ஸ்நாக்ஸ் பன்னீர் உருண்டை
தேவையான பொருட்கள் :
பன்னீர் – 1 கப்
பிரட்தூள் – 1/2கப்
உருளைக்கிழங்கு – 1 சிறியது
பெரிய வெங்காயம் – 1 சிறியது
புதினா இலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பச்சை மிளகாய் – 1
மிளகாய் தூள் – 3/4 தேக்கரண்டி
சாட் மசாலா – 1/4 தேக்கரண்டி
மாங்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
சோள மாவு – 1மேஜைக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
பன்னீரை துருவிக்கொள்ளவும்.
வெங்காயம். ப.மிளகாய், புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியவுடன் அடுப்பை அணைத்துவிடவும்.
அதனுடன் துருவிய பன்னீர், கொத்துமல்லி, புதினா, மசித்த உருளைக்கிழங்கு, சோள மாவு, மிளகாய் தூள், சாட் மசாலா, பிரட் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கைகளால் பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிடித்த உருண்டைகளை எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
சுற்றிலும் பொன்னிறமாக வரும் வரை நன்கு பொரித்து எடுக்கவும்.
சுவையான பன்னீர் உருண்டை தயார்.