சத்தான ஸ்நாக்ஸ் கோதுமை ரவை டோக்ளா
தேவையான பொருட்கள் :
கோதுமை ரவை – ஒரு கப்,
பச்சை மிளகாய் – ஒன்று,
இஞ்சி – சிறிய துண்டு,
கொத்தமல்லி (நறுக்கியது) – ஒரு டேபிள்ஸ்பூன்,
புளித்த தயிர் – ஒரு டேபிள்ஸ்பூன்,
ஈனோ ஃப்ரூட்சால்ட் பிளெயின் – சிறிதளவு,
தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
கடுகு – அரை டீஸ்பூன்,
சீரகம் – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை,
பொடித்த சர்க்கரை – அரை டீஸ்பூன்,
செய்முறை:
கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்தெடுக்கவும்.
இஞ்சியை தோல் சீவி, பச்சை மிளகாயை காம்பு நீக்கி ஒன்றாக சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
வறுத்த கோதுமை ரவையை ஒரு பாத்திரத்தில் போட்டு… உப்பு, இஞ்சி – பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி, ஈனோ ஃப்ரூட் சால்ட், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், சீரகம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதனுடன் தயிர், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டி இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும். இதை அரை மணிநேரம் ஊறவிடவும்.
ஒரு இஞ்ச் குழிவுள்ள வட்ட தட்டில் எண்ணெய் தடவி, கரைத்த மாவை பரப்பவும்.
இட்லி பாத்திரத்தில் இதை 15 நிமிடம் ஆவியில் வேகவிடவும். பின்பு வெளியே எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து மேலே பரவலாக போடவும்.
அடுத்து அதன் மேலே கொத்தமல்லி, தேங்காய் துருவலையும் பரவலாக தூவவும்.
பொடித்த சர்க்கரையில் சிறிது தண்ணீர், எலுமிச்சைச் சாறு கலந்து மேலாக ஊற்றவும்.
கோதுமை ரவை டோக்ளா தயார்.