தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

பிரசவத்துக்கு பிறகு தொப்பையை குறைக்கும் இயற்கை வழிகள்

பிரசவத்துக்கு பிறகு தொப்பையை குறைக்கும் இயற்கை வழிகள்

பெரும்பாலான தாய்மார்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு வயிறு பெரிதாகவே இருக்கிறது. சில தாய்மார்களுக்கு தொப்பை அதிகமாகக் காணப்படுகிறது. இந்தத் தொப்பையை கரைக்க எளிமையான வழிமுறைகள் உள்ளன. தாய்மார்கள் மட்டுமல்ல (reduce belly fat for mothers after birth) கொழுப்பைக் குறைக்க நினைக்கும் அனைவருக்குமே இந்தப் பதிவு ஏற்றது. கொழுப்பைக் குறைப்பது எப்படி? அவற்றைப் பற்றி இங்குப் பார்க்கலாம்.






கொள்ளு ரசம் வாரம் ஒரு நாள் வைத்து சாப்பிட்டு வர, தொப்பைக் கரையும். அதேசமயம் உடலில் தங்கியுள்ள கழிவுகளும் வெளியேறும். கொள்ளு துவையல் அல்லது கொள்ளு சுண்டல் கூட சாப்பிடலாம். கவனம், கொள்ளு சூடு என்பதால் வாரம் ஒரு முறை மட்டும் சாப்பிடலாம். மாதவிடாய் தொல்லை இருப்பவர்கள் கொள்ளு சாப்பி மருத்துவர் அனுமதியுடன் சாப்பிடலாம்.

இட்லி, தோசை, பொங்கல், ஆப்பம், பிரெட் இன்னும் பல அடுக்கிக் கொண்டே போகலாம் தானே… இதெல்லாம் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு பழ உணவுகளுக்கு மாறுங்கள். வெறும் வயிற்றில் பழமா…. ஆம்… காலை உணவு பழங்களாக சாப்பிட்டு பாருங்கள். கொழுப்பும் தொப்பையும் காணாமல் போய்விடும். எண்ணற்ற பழங்கள் இருக்கின்றன. பழங்களைக் காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது.
எலுமிச்சை தோலை நறுக்கி, சின்ன சின்னதாக எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு இன்ச் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். 1 ½ டம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு கொதிக்க வைக்கவும். ¾ டம்ளராக சுண்டியதும் இளஞ்சூடாக இருக்கும் போது ஒரு சிட்டிகை இந்துப்பு கலந்து பருகவும். கொழுப்பு, அடைப்பு போன்றவை நீங்கிவிடும். கழிவுகள் வெளியேறும். ரத்தம் சுத்தமாகும், தொப்பைக் குறையும்.

தொப்பையைக் குறைக்கும் எளியப் பயிற்சி (Exercise for Belly Fat)

பாயில் அல்லது யோகா மேட்டில் நேராக படுத்துக் கொள்ளவும். உள்ளங்கைகள் தரையைத் தொட்டவாறு இருக்கட்டும். 2-3 இன்ச் அளவுக்கு இரு கால்களையும் முட்டி மடங்காமல் தூக்கவும். உயரத்தில் காலைத் தூக்கத் தேவையில்லை. வயிறு நடுங்குவதை உங்களால் உணர முடியும். முடியாத போது காலை கீழே இறக்கி வைத்துவிட்டு ஓய்வெடுங்கள். பிறகு மீண்டும் பயிற்சியை செய்யுங்கள். இதுபோல 5 முறை செய்யவும். வெறும் வயிற்றில், காலை மற்றும் மாலை செய்ய வேண்டும். தொடர்ந்து செய்தால் தொப்பைக் குறையும்.






தொப்பையைக் (Belly Fat) குறைக்கும் எளிய வழிகள்

* வாரம் இருமுறை கருணைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

* குடிக்கும் தண்ணீரில் சீரகத்தைப் போட்டு, அதை குடிநீராக குடிக்கலாம்.

* பசித்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். பசி இல்லையென்றால் பசிக்கும் வரை காத்திருங்கள்.

* பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, மைதா, ஐயோடின் உப்பு ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

* இனிப்புகள், ஐஸ்கிரீம், குளிர்பானம், குளிர்ந்த நீர், பாக்கெட் உணவுகள், செயற்கை பழச்சாறுகள், ரெடிமேட் உணவுகள் ஆகியவற்றை அவசியம் தவிர்க்கவும்.

* எந்த உணவைச் சாப்பிட்டாலும் உதடுகள் மூடி இருக்க வேண்டும். பற்கள் மட்டும் உணவை மெல்ல வேண்டும். மிக்ஸியில் ஜாரை மூடிதானே அரைப்போம். அதேதான்… உதடுகளை மூடி நன்கு மென்று சாப்பிடுங்கள். தொப்பை வரவே வராது.

* நன்கு மென்று கூழாக்கி சாப்பிடும் பழக்கம் உள்ளவருக்கு, கொழுப்பும் சேராது. தொப்பையும் இருக்காது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker