ஆரோக்கியமான உணவிற்கு மாறுங்கள்
வைட்டமின் ‘டி’ சத்து குறைபாடு கீழ்கண்ட பாதிப்புகளுக்கு காரணம் ஆகின்றது என மருத்துவ உலகம் நீண்ட ஆய்வுகளின் முடிவாகக் கூறுகின்றது.
* எலும்பு தேய்மானம்
* எலும்பு கரைதல்
* புற்று நோய்
* மனஉளைச்சல்
* தசைகள் பலவீனம்
* இறப்பு
ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன.
மீன் எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு இவற்றின் மூலமும் வைட்டமின் டி கிடைக்கும். இவற்றினை அன்றாடம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சூரிய ஒளி மூலம் பெறுவது எளிதான வழி என்பது அனுபவ உண்மையாகும். ஜன்னல் வழியாக வரும் சூரிய ஒளி மூலம், இதனைப் பெற முடியாது. எனவே சோம்பல் படாமல் காலை, மாலை நடைபயிற்சி மூலம் இதனைப் பெறுங்கள்.
நம் நாட்டில் பகல் வேலைகளில் மிகவும் கொளுத்தும் வெய்யிலாக இருப்பதால் இந்த நேரத்தினை சிபாரிசு செய்வதில்லை. காலை 10 மணி முதல் மாலை 3.00 – 4.30 மணி வரை (அக்னி நட்த்த்திர நேரத்தில் சூரிய உஷ்ணத்தினைப் பொறுத்து செய்யவும்) 10-20 நிமிடங்கள் உடல் மீது சூரிய ஒளி பட்டால் நல்லது.
சற்று அடர்ந்த நிறம் கொண்டவர்களுக்கு அவர்களது நிறமே சிறந்த சரும பாதுகாப்பினை அளித்து விடுகின்றது. இது இயற்கை sun screen ஆகும். ஆனால் இவர்களுக்கு சற்று கூடுதல் நேரம் சூரிய ஒளி தேவைப்படும். எனவேத்தான் அடர்ந்த நிறம் கொண்டவர்களுக்கு வைட்டமின் ‘டி’ குறைபாடு சற்று கூடுதலாகவே உள்ளது. ஆனால் கறுப்பு கண்ணாடி, தலையில் தொப்பி அணிந்து செல்வது இவையெல்லாம் தேவையே என்று கூறப்படுகின்றது.
sun screen போட்டு வெய்யிலில் இருக்கலாமா என்ற கேள்வியினை இளைய சமுதாயம் நிறையவே கேட்கின்றது. இவர்கள் ‘ஏசி’யினை விட்டு வெளியே வருவதே கடினமாகி விட்டது. இவர்கள் காலையில் உடற்பயிற்சி என்ற முயற்சியில் திறந்த வெளியில் இருந்தாலே இவர்களது உடல் ஆரோக்கியம் காக்கப்படும். எந்த ஒரு நல்ல முயற்சியினையும் ஒன்று செய்யாது இருப்பது அல்லது அதிகமாக செய்து அதனை தீமையாக்கிக் கொள்வது மனித இயல்பாகி விட்டது.
எந்த அளவிற்கு சூரிய ஒளி பெற வேண்டுமோ அந்த அளவே பெற வேண்டும். நம் ஊர் வெயிலுக்கு கூடுதலாக வெயிலில் இருந்தால்
* sun brun எனப்படும் சரும பாதிப்பு ஏற்படும். சருமம் சிவந்து, வீங்கி, வலியுடன் கொப்பளங்கள் ஏற்படும்.
* கண் நோய்கள் உண்டாகும்.
* சருமம் வயோதிக தோற்றத்தினை அளிக்கும்.
* Heat Stroke எனப்படும் பாதிப்பு ஏற்படும்.
* சரும புற்று நோய் ஏற்படும்.