சமையல் குறிப்புகள்புதியவை
குளு குளு மாம்பழ மில்க் ஷேக்
இந்த சீசனில் கிடைக்கும் மாம்பழத்தை வைத்து விதவிதமான உணவுகளை தயாரிக்கலாம். இன்று மாம்பழத்தை வைத்து மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மாம்பழத் துண்டுகள் – 2 கப்,
பால் – கால் லிட்டர்,
ஐஸ் கட்டிகள் – தேவையான அளவு,
சர்க்கரை – தேவையான அளவு.
செய்முறை :
சிறிது மாம்பழ துண்டுகளை தனியாக எடுத்த வைக்கவும்.
மீதமுள்ள மாம்பழத் துண்டுகளுடன் சர்க்கரை, தேவையான அளவு பால் விட்டு மிக்சியில் நன்றாக நுரைக்க அடிக்கவும்.
அதனுடன் மீதமுள்ள பால், ஐஸ்கட்டிகள் சேர்த்து மீண்டும் ஒருமுறை நன்றாக நுரைக்க அடித்து கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேலே துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள மாம்பழ துண்டுகளை போட்டு பருகவும்.
சூப்பரான மாம்பழ மில்க் ஷேக் ரெடி.