குழந்தைகளுக்கு ஏன் தடுப்பூசி அவசியம்?
குழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எட்டும் வரை, ஒரு குறிப்பிட்ட வயதை, சரியான பருவத்தை அடையும் வரை அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தைகள் பிறந்த உடன் தொடங்கி அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை எட்டும் வரை, ஒரு குறிப்பிட்ட வயதை, சரியான பருவத்தை அடையும் வரை அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகள் எப்பொழுது, எந்த வயதில், என்ன தடுப்பூசியை போடா வேண்டும், அவற்றின் விலை நிலவரம் என்னவாக இருக்கும் என்பது குறித்து சிறுவர் மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையை பார்த்து நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
தாயின் கருவில் கரு உருவாக்கி, இந்த பூமியில் ஜனிக்கும் போது, கருவிற்கு எந்த பலமும், எந்த ஆற்றலும் இருக்காது; அது தோலும், எலும்பும், உயிரும் கொண்ட ஒரு உயிராகவே இந்த பூமியில் பிறப்பெடுக்கிறது. அப்படி குழந்தைகள் பூமியில் பிறக்கையில், அவர்கள் உடல் எல்லாவித நோய்க்கிருமிகளின் தொற்றுகளுக்கும் ஆளாகக் கூடிய வண்ணம் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்கும்.
தடுப்பூசி ஏன் அவசியம் என்ற கேள்விக்கு, நோய் எதிர்ப்பு சக்தி என்ற விடையையே நம்மால் அளிக்க இயலும். அதாவது, குழந்தைகளோ பெரியவர்களோ குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டிருந்தால், அவர்கள் எளிதில் நோய்த்தொற்றுகளால் தாக்கப்படலாம்.
ஆகவே, குழந்தைகளை எந்தவித நோய்த்தொற்றுகளும் தாக்காமல் இருக்க, குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ, அவர்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். அதுவும் முக்கிய நோய்களான polio – போலியோ, measles – மேசல்ஸ், rubella – ரூபெல்லா, rotavirus – ரோடா வைரஸ், mumps – மெம்பிஸ், smallpox – சின்னம்மை – இவற்றைத் தடுக்க கட்டாயம் தடுப்பூசி அவசியம்.