உடலுக்கு சத்து தரும் சீரக கஞ்சி
வெயில் காலத்தில் வயதானவர்கள், குழந்தைகள் இந்த சீரக கஞ்சியை குடித்தால் உடலுக்கு சத்து கிடைக்கும். இன்று இந்த கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சீரக சம்பா அரிசி – ஒரு கப்
பாசிப்பருப்பு – அரை கப்
சின்ன வெங்காயம் – 6
உரித்த பூண்டுப் பல் – 4
பச்சை மிளகாய் – 3
தேங்காய்த் துருவல் – அரை கப்
சீரகம் – கால் டீஸ்பூன்
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
வெங்காயம் – ஒன்று
இஞ்சி விழுது – கால் டீஸ்பூன்
புதினா இலைகள் – 8
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கொள்ளவும்.
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெறும் வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு, வாசனை வரும் வரை (கருகாமல்) நன்கு வறுத்து எடுக்கவும்.
அரிசியைக் கழுவி களையவும்.
கழுவிய அரிசி, பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், 5 கப் தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து மூடி 5 விசில்விட்டு இறக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி… தேங்காய்த் துருவல், சீரகம் சேர்த்து சிவக்க வறுக்கவும். ஆறிய பின் சிறிதளவு தண்ணீர்விட்டு கொரகொரவென அரைத்து எடுக்கவும்.
பாத்திரத்தில் அரைத்த விழுது, உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்கவும்.
வாணலியில் நெய்யைவிட்டுச் சூடாக்கி… பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளிக்கவும்.
இதனுடன் வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து வதக்கவும்.
பிறகு, வேகவைத்த அரிசி – பருப்பு கஞ்சி, தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். கடைசியாக கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவி இறக்கவும்.
உடலுக்கு சத்து தரும் சீரக கஞ்சி ரெடி.