வாயுத் தொல்லை தீர்க்கும் கை வைத்தியங்கள்
வாயுத் தொல்லை காரணமாக பொது இடம் எனக் கூட பாராமல் சிலர் டர் புர் என வாயுவை வெளியிடுவர். தர்மசங்கடமான இந்த விஷயத்தைத் தீர்க்க கை வைத்தியங்கள் உள்ளன.
வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்கள், உருளைக்கிழங்கைத் தவிர்த்தாலே போதும். பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
வாதநாராயணன் இலையைக் காயவைத்துப் பொடியாக்கித் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 கிராம் பொடியை சுடு தண்ணீரில் கலக்கிக் குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
வெள்ளைப் பூண்டு(2), இஞ்சி (ஒரு துண்டு) இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து வாயுப் பிடிப்பு உள்ள இடத்தில் தடவினால் நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு, வாயுப் பிடிப்பால் உடல் வலி ஏற்பட்டு அவதிப்படுவார்கள். இவர்கள், முருங்கைக் கீரைச் சாறில் உப்பு சேர்த்துக் குடித்தால், இரண்டு மணி நேரத்தில் வலி குறையும்.
அரைக் கீரையுடன் சீரகம், பூண்டு, மிளகு ஆகியவற்றை வேகவைத்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
வாயுத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள், சுக்கைப் பொடியாக்கி அடிக்கடி வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் பிரச்னையில் இருந்து மீளலாம்.
வாழைக்காயை, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை தீரும்