சத்து நிறைந்த ஜவ்வரிசி – பாசிப்பருப்பு அடை
டயட்டில் இருப்பவர்கள் அடிக்கடி உணவில் ஜவ்வரிசியை சேர்த்து கொள்ளலாம். இன்று ஜவ்வரிசி, பாசிப்பருப்பு சேர்த்து அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஜவ்வரிசி – அரை கப்,
பாசிப்பருப்பு – கால் கப்,
வெங்காயம் – 2,
பச்சை மிளகாய் – 3,
அரிசி மாவு – 5 டீஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு,
எண்ணெய் – 100 கிராம்,
உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை :
ஜவ்வரிசியை நான்கு மணி நேரம் ஊறவைக்கவும்.
பாசிப்பருப்பை வேகவைத்து மசித்து கொள்ளவும்.
வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த ஜவ்வரிசி, வேக வைத்த பாசிப்பருப்புடன் அரிசி மாவு, வெங்காயம், ப.மிளகாய், தேங்காய்த் துருவல், கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொஞ்சம் நீர் விட்டு சற்றே கெட்டியாக அடை மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை அடைகளாக தட்டி வைக்கவும்.
தோசைக் கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு, தட்டிய அடையைப் போட்டு, அடுப்பை `சிம்’மில் வைத்து மெதுவாக இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.
சத்து நிறைந்த ஜவ்வரிசி – பாசிப்பருப்பு அடை ரெடி.