ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

பிரியாணி சுவையில் 2 பொருள் மாத்திரம் வைத்து நவரத்தின புலாவ் செய்வது எப்படி?

அட்டகாசமான ரெசிபி வழக்கமான பிரியாணி மற்றும் தக்காளி சாதம் இரண்டையும் சாப்பிட்டு சலித்து போய் விட்டது என்றால் புது வகையான உணவுகளை செய்து சாப்பிடலாம்.

வழக்கமான பிரியாணி சுவையில் இருக்கும் புலாவ் பற்றி பலருக்கும் தெரிந்திருக்காது.

தக்காளி சாதம் செய்முறையை பயன்படுத்தி செய்யக் கூடிய புலாவ்வை வீட்டில் செய்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்களை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அந்த வகையில், வட இந்தியாவில் மிக பிரபலமாக இருக்கும் நவரத்தின புலாவை எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.

பிரியாணி சுவையில் 2 பொருள் மாத்திரம் வைத்து நவரத்தின புலாவ் செய்வது எப்படி? | Navratan Pulao Recipe In Tamil

தேவையான பொருட்கள்

    • சாமை அரிசி  – ஒரு கப்
    • வெங்காயம் – 1
    • பச்சை மிளகாய் – 2
    • ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் – தலா 1
    • நறுக்கிய கேரட், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி, குடமிளகாய், பீன்ஸ் கலவை – ஒரு கப்
    • இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
    • கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
    • எண்ணெய், உப்பு – தேவையான அளவு

தயாரிப்பு முறை

பிரியாணி சுவையில் 2 பொருள் மாத்திரம் வைத்து நவரத்தின புலாவ் செய்வது எப்படி? | Navratan Pulao Recipe In Tamil

சுத்தம் செய்த சாமை  அரிசியை தண்ணீர் ஊற்றி ஊற வைக்கவும்.

அதன் பின்னர், குக்கரில் எண்ணெய் விட்டு ஏலக்காய், பட்டை, பிரியாணி இலை, லவங்கம் தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதங்க விடவும்.

அதனுடன் நீளமாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் இரண்டையும் சேர்க்கவும்.

இவை வதங்கி கொண்டிருக்கும் பொழுது ஊற வைத்த சாமை  அரிசியில் இருந்து தண்ணீரை வடித்து வதங்கிய கலவையுடன் கலந்து கொள்ளவும்.

பிரியாணி சுவையில் 2 பொருள் மாத்திரம் வைத்து நவரத்தின புலாவ் செய்வது எப்படி? | Navratan Pulao Recipe In Tamil

ஒரு பங்கு அரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக விடவும். மிதமான தீயில் வைத்து வேக வைத்து இறக்கவும்.

அதன் பின்னர், ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் நறுக்கிய காய்கறிகளை வதக்கவும். குக்கரில் ஆவி போனதும், மூடியைத் திறந்து வதக்கிய காய்கறிகளை சேர்த்து பரிமாறினால் சுவையான புலாவ் தயார்!

பிரியாணி சுவையில் 2 பொருள் மாத்திரம் வைத்து நவரத்தின புலாவ் செய்வது எப்படி? | Navratan Pulao Recipe In Tamil

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker