ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

குடைமிளகாய் சிக்கன் மசாலா… இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது

அசைவ பிரியர்களின் விருப்ப பட்டியலில் நிச்சயம்  சிக்கன் முக்கிய இடம் பிடித்துவிடும். குறிப்பாக சிக்கனில் இருந்து அதிக புரதடும் கிடைப்பதால் இது உடல் ஆரோக்கியத்தை மேமம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.

வழக்கமான  சிக்கன் குழம்பு சலித்துவிட்டதா? அப்போ இந்த சன்டே சற்று வித்தியாசமான முறையில் அசத்தல் சுவையில் எவ்வாறு குடைமிளகாய் சிக்கன் மசாலா செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

Sunday special: குடைமிளகாய் சிக்கன் மசாலா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Chicken Masala Recipe In Tamil

தேவையான பொருள்கள்

சிக்கன் – 500 கிராம்

இஞ்சி – ஒரு துண்டு (2 இன்ச் அளவு)

பூண்டு – 12 பல்

மிளகாய்த் தூள் – 1 ½ தே.கரண்டி

குடை மிளகாய் – 2

பெரிய வெங்காயம் – 2

சோயா சாஸ் – 1 மேசைக்கரண்டி

எலுமிச்சம் பழம் – பாதி

மஞ்சள் தூள் – ¼ தே.கரண்டி

கார்ன் ஃ பிளார் மாவு – 2 மேசைக்கரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

Sunday special: குடைமிளகாய் சிக்கன் மசாலா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Chicken Masala Recipe In Tamil

செய்முறை

முதலில் சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி கடைசியாக மஞ்சள் மற்றும்  உப்பு சேர்த்து அலசி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து குடை மிளகாயை இரண்டு இன்ச் அளவு துண்டுகளாக டிக்காவிற்கு சேர்ப்பது போல் நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பூண்டு மற்றும் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

Sunday special: குடைமிளகாய் சிக்கன் மசாலா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Chicken Masala Recipe In Tamil

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தோல் உரித்த பூண்டு மற்றும் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

அதனையடுத்து எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து விதைகளை நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கனை சேர்த்து அதனுடன் சோயா சாஸ், பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு, மற்றும் அரைத்து வைத்த இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, அதனுடன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 30 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும்.

Sunday special: குடைமிளகாய் சிக்கன் மசாலா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Chicken Masala Recipe In Tamil

பின்னர் அதை அப்படியே அடுப்பில் வைத்து சிக்கன் நன்கு வேகும் வரை வைக்கவும். இடையிடையே கிளறிவிட்டு தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் தெளித்து கொள்ளலாம்.

நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி ஆற விட வேண்டும் பின்னர் ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

Sunday special: குடைமிளகாய் சிக்கன் மசாலா... இப்படி செய்தா கொஞ்சமும் மிஞ்சாது | Tasty Chicken Masala Recipe In Tamil

நன்றாக வதங்கியதும் வேக வைத்து ஆற வைத்த சிக்கன் சேர்த்து நன்கு கிளறிவி்ட்டு  கடைசியாக கார்ன் ஃ பிளார் மாவைத் தூவி நன்கு கிளறி இறக்கினால் அவ்வளவு  தான் சுவையான குடைமிளகாய் சிக்கன் தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker