சருமத்தை இளமையாகவே வைத்திருக்கும் பீட்ரூட் சாதம்… எப்படி செய்வது..
பொதுவாக பீட்ரூட் என்றாலே இனிக்கும் என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் இந்த காய்கறியை அனைவருக்கும் பிடிக்கும்.
பீட்ரூட்டை மற்ற சமயங்களில் சாப்பிடுவதை விடவும் குளிர்காலங்களில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம். பீட்ரூட் ரத்தத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யவும் ஈமோகுளோபின் அளவை அதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.
இதய ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் இருந்து ஆரோக்கியமான, இளமையான சருமத்தை மேம்படுத்துவது வரை பல நன்மைகளை வழங்குகிறது.
அந்த வகையில் ஏராளமான நன்மைகள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் அசத்தல் சுவையில் எவ்வாறு பீட்ரூட் சாதம் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
அரிசி – 1 கப்
பீட்ரூட் – ½ கப்(துருவியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
இஞ்சி பேஸ்ட் – ½ தே.கரண்டி
பூண்டு பேஸ்ட் – ½ தே.கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
சீரகம் – ½ தே.கரண்டி
கொத்தமல்லி இலை – தூவுவதற்கு
கரம் மசாலா – ½ தே.கரண்டி
இலவங்கப்பட்டை – 1 இன்ச்
பிரியாணி இலை – 2
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி தண்ணீரில் 15 நிமிடங்கள் வரையில் ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.
அதன் பிறகு, சீரகம், பிரியாணி இலை, இலவங்கப்பட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, உப்பு மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
அதன்பிறகு, துருவி வைத்திருக்கும் பீட்ரூட்டை சேர்த்து வேகவிடவும். பிறகு, ஊறவைத்திருக்கும் அரிசியை சேர்த்து வேகவிடவும்.
இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் இவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்டகியம் நிறைந்த பீட்ரூட் சாதம் தயார். அதனை வாரம் ஒரு முறை சாப்பிடுவது குறிப்பாக சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.