ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவைமருத்துவம்

வெந்தய விதை தண்ணீரை யார் குடிக்கக்கூடாது? மீறினால் இந்த பாதிப்பு வரும்

நமது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஓர் மசாலாப் பொருள் தான் வெந்தயம். வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதை விட, வெந்தயம் ஊற வைத்த நீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவை நிரம்பியிருக்கின்றன. உடல்சூட்டை தணிக்கக்கூடியது வெந்தயம். சிறுநீரையும் பெருக்கக்கூடியது.

ஆனாலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெந்தய விதை நீர், சிலரின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எந்த நபர்கள் வெந்தய நீர் குடிக்க கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

வெந்தய விதை தண்ணீரை யார் குடிக்கக்கூடாது? மீறினால் இந்த பாதிப்பு வரும் | Who Should Not Drink Fenugreek Seed Water Danger

இரத்த அழுத்த நோயாளிகள்: இரத்த அழுத்த நோயாளியாக இருந்து இரத்த அழுத்த மருந்து எடுத்துக் கொண்டால் அந்த நபர்கள் வெந்தய விதை நீரை உணவிலோ அல்லது வேறு விதத்திலோ எடுத்துக்கொள்ள கூடாது.

மீறி வெந்தய விதை நீரைக் குடிப்பதன் மூலம் நோயாளியின் இரத்த அழுத்தம் திடீரெனக் குறையக்கூடும். இதன் காரணமாக அவர் தலைச்சுற்றல், சோர்வு மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

வெந்தய விதை தண்ணீரை யார் குடிக்கக்கூடாது? மீறினால் இந்த பாதிப்பு வரும் | Who Should Not Drink Fenugreek Seed Water Danger

கர்ப்பிணிப் பெண்கள்: பெண்கள் கர்ப்பமாக இருந்தால் வெந்தய விதைகளை தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இது மட்டுமல்ல பிரசவத்திற்குப் பின்னர்  ஒரு நிபுணரிடம் ஆலோசித்த பின்னரே வெந்தய விதை நீரைக் குடிக்க வேண்டும்.

இந்த வெந்தய நீர் குடித்தால் கர்ப்ப காலத்திலும், பிரசவத்தின் போதும், பிரசவத்திற்குப் பிறகும் கூட நீங்கள் பிரச்சினைகளைச் சந்திக்க
நேரிடும்.

வெந்தய விதை தண்ணீரை யார் குடிக்கக்கூடாது? மீறினால் இந்த பாதிப்பு வரும் | Who Should Not Drink Fenugreek Seed Water Danger

குறைந்த இரத்த சர்க்கரை உள்ள நோயாளிகள்: உங்கள் இரத்த சர்க்கரை அளவு அடிக்கடி குறைவாக உள்ளதா? அப்படி இருந்தால் நீங்கள் வெந்தய விதை நீரைக் குடிப்பது உங்களது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

காரணம் வெந்தய விதை நீர் உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும். இதனால்தான் உங்கள் இரத்த சர்க்கரை அளவு ஏற்கனவே குறைவாக இருந்தால், வெந்தய விதை நீரைக் குடித்த பின்னர் உங்கள் இரத்த சர்க்கரை அளவு மேலும் குறையக்கூடும்.

வெந்தய விதை தண்ணீரை யார் குடிக்கக்கூடாது? மீறினால் இந்த பாதிப்பு வரும் | Who Should Not Drink Fenugreek Seed Water Danger

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker