வழக்கமான உணவை அதிகப்படுத்தணுமா? இந்த ஒரு குருமா இருந்தா போதும்
வீட்டில் பொதுவாக எல்லா சமையலுக்கும் பயன்படுத்தும் ஒரு காய்கறி என்றால் அது தக்காளி தான். இந்த தக்காளியை வைத்து பல உணவுகள் செய்ய முடியும்.
கறி குழம்பு முதல் ரசம் வரை எல்லாவற்றிற்கும் தக்காளி பயன்படுத்தப்படுகிறது. தக்காளியில் செய்யப்படுவது எதுவாக இருந்தாலும் அவை வீட்டில் சப்பாத்தி, சாதம், இட்லி மற்றும் தோசை என எல்லாவற்றிற்கும் வைத்து சாப்பிடலாம்.
அந்த வகையில் இந்த பதிவில் பார்க்கப்போவது தக்காளி குருமா எப்படி அருமையான சுவையில் செய்வத என்பது தான். வாங்கள் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 5 முதல் 6 தக்காளி
- 2 பெரிய வெங்காயம்
- அரை டேபிள் ஸ்பூன் சோம்புத் தூள்
- அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- அரை டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
- அரை டேபிள் ஸ்பூன் பச்சை மிளகாய்
- ஒரு கப் தேங்காய்ப் பால்
- தேவையான அளவு உப்பு
- தாளிக்கத் தேவையான எண்ணெய்
- கால் டீஸ்பூன் கடுகு
- ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை
- கால் டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
செய்யும் முறை
முதலில் ஒரு அரை மூடி தேங்காயை துருவி பின்னர் ஒரு மிக்சியில் போட்டு அரைக்க வேண்டும். இதில் தேங்காயப்பாலை வடிகட்டி தனியே எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அனைத்து தக்காளியிலும் அதன் அடிப்பகுதியில் கூட்டல் குறி வடிவில் கத்தியால் கோடிட்டு, கொதிக்க வைத்த தண்ணீரில் 5 நிமிடங்கள் போட்டு வேக விட வேண்டும்.
சரியாக 5 நிமிடங்களுக்குப் பிறகு தக்காளியை எடுத்து அதன் தோலை முழுவதுமாக உரிக்க வேண்டும். இப்பொழுது தோல் நீக்கப்பட்ட தக்காளியை மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கி விட வேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்து வைத்த தக்காளி கூழை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் இதில் சோம்புத் தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் ஆகியவற்றை போட வேண்டும்.
இந்த கலவையில் தேவையான அளவு உப்பு மற்றும் 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து இவை அனைத்தையும் நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
இவை அனைத்தும் சிறிது நேரம் கொதித்த பின்னர் தேங்காய் பால் சேர்த்து இறுதியாக இதில் நறுக்கிய மல்லித் தழையை தூவி இறக்க வேண்டும்.
இந்த குறுமாவை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் உண்ணலாம். ஆரோக்கியம் நிறைந்த உணவாகும். இதற்கு தோசை, இட்லி, சப்பாத்தி, சுடு சாதம் போன்ற உணவுகள் சாப்பிட சிறந்தது.