ஆரோக்கியம்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

நாவில் எச்சில் ஊற வைக்கும் எலுமிச்சை தோல் ஊறுகாய்.. உடனே செய்து ருசியுங்கள்

நாவில் எச்சில் ஊற வைக்கும் எலுமிச்சை தோல் ஊறுகாய் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வகையில், எலுமிச்சை தோல் ஊறுகாய் எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.

நாவில் எச்சில் ஊற வைக்கும் எலுமிச்சை தோல் ஊறுகாய்.. உடனே செய்து ருசியுங்கள் | How To Ready Instant Lemon Peel Pickle

தேவையான பொருட்கள்

  • 10-15 எலுமிச்சை தோல்கள்
  • உப்பு – தேவையான அளவு
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
  • சர்க்கரை – 1/2 தேக்கரண்டி
  • கடுகு எண்ணெய் – 1 தேக்கரண்டி
  • கடுகு – 1/4 தேக்கரண்டி
  • பெருங்காயம் – ஒரு சிட்டிகை

செய்முறை

நாவில் எச்சில் ஊற வைக்கும் எலுமிச்சை தோல் ஊறுகாய்.. உடனே செய்து ருசியுங்கள் | How To Ready Instant Lemon Peel Pickle

  1. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். அந்த தண்ணீர் கொதிக்கும் பொழுது மேல் ஒரு தட்டை வைக்கவும்.
  2. எலுமிச்சை தோல்களை அந்த தட்டில் போட்டு அதனை மூடி சரியாக 5-10 நிமிடங்கள் வேக வைக்கவும். தோல்களை வெந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை தோல்களை ஒரு கிண்ணத்தில் கொட்டி அதன் மேல் கல் உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  3. அதன் பின்னர் அடுப்பில் வாணலியொன்றை வைத்து கடுகு எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
  4. அதில், கடுகு, பெருங்காயம் போட்டு தாளித்து எலுமிச்சை தோலின் மேல் ஊற்றி கலந்து விடவும். புளிப்பு சுவை இன்னும் வேண்டும் என்றால் அரை கப் எலுமிச்சை சாற்றையும் சேர்க்கலாம், இப்படி செய்தால் சுவையான எலுமிச்சை தோல் ஊறுக்காய் தயார்!

நாவில் எச்சில் ஊற வைக்கும் எலுமிச்சை தோல் ஊறுகாய்.. உடனே செய்து ருசியுங்கள் | How To Ready Instant Lemon Peel Pickle

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker