பிரியாணியின் பாத்திரங்கள் ஏன் சிவப்புத் துணியால் சுற்றப்படுகிறது.. உண்மை காரணம் இதுதான்
பொதுவாகவே அனைவருமே விரும்பி சாப்பிடும் உணவுகளின் பட்டியலில் பிரியாணிக்கு என்று ஒரு தனி இடம் காணப்படுகின்றது.
பிரியாணி எந்த வகையாக இருந்தாலும் சரி, சிக்கன், மட்டன், முட்டை அல்லது வெஜ் பிரியாணி என எதுவாக இருப்பினும் பிரியாணி செய்யும் பாத்திரங்கள் மாத்திரம் எப்போதும் சிவப்பு துணியால் மூடி வைக்கப்பட்டிருப்பதை அவதானித்திருக்கின்றீர்களா?
ஏன் பிரியாணி பாத்திரங்கள் சிவப்பு துணியால் மூடப்படுகின்றது என்ற சந்தேகம் பெரும்பாலானர்கள் மத்தியில் நிலவுகின்றது. இது குறித்த தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
1856 ஆம் ஆண்டு அவாத்தின் 10வது மற்றும் கடைசி நவாப் வாஜித் அலி ஷா, பிரிட்டிஷ் காலனித்துத்தில் போது பதவி நீக்கம் செய்யப்படார்.
பின்னர் தனது அரச சிறப்புரிமைகளை பறிகொடுத்தன் காரணமாக லக்னோவை விட்டு வெளியேறி கல்கத்தாவிற்கு குடிபெயர்ந்தார்.
அதன் பின்னர் இவரின் கையால் தயாரிக்கப்பட்டதே முதல் பிரியாணி. அதன் பெயர்தான் ஹண்டி பிரியாணி என்று குறிப்பிடப்பட்டது.
பாஸ்மதி அரிசி, பஞ்சு போன்ற இறைச்சி அல்லது காய்கறிகள் மற்றும் சிறிதளவு உருளைக்கிழங்கு ஆகிய பிரதான மூலப்பொருட்களை கொண்டே ஹண்டி பிரியாணி தயார் செய்யப்டுகின்றது.
வரலாற்றின் பிரகாரம் ‘தர்பாரி சடங்கு’ படி, பேரரசர் ஹுமாயூனின் உணவுகள் சிவப்பு துணியாலும், மற்ற உலோக அல்லது பீங்கான் பாத்திரங்கள் வெள்ளை துணியாலும் மூடப்பட்டு பரிமாறிக்கப்படுவது வழக்கமாக பின்பற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இந்த வழக்கம் முகலாய அரசவையிலும் பின்பற்றப்பட்டாத வரலாற்று தகவல்கள் காணப்படுகின்றது.
அதன் பின்னரே பிரியாணி பானையை சிவப்பு துணியால் மூடும் வழக்கம் பின்பற்றப்பட்டு வருகின்றது.
பிரியாணி பாத்திரத்தை சிவப்பு துணியால் மூடுவது அதிகமான மக்களின் கவனத்தை ஈப்பதற்கும் வியாபாரத்தை பெருக்குவதற்கும் என்ற கருத்து பெரும்பாலான மக்கள் மத்தியில் இருக்கின்றது. ஆனால் இது உண்மையில் ஒரு சுவாரஸ்யமான வரலாற்று பின்னணியின் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.