வீட்டில் முட்டையும் பிரட்டும் இருக்கா? அப்போ இந்த அசத்தல் ஸ்நாக்ஸ் செய்து பாருங்க
குறிப்பாக வீட்டில் சிறியவர்கள் இருந்தால் சொல்லவே வேண்டாம். நிச்சயம் ஸ்நாக்ஸ் செய்துதர சொல்லி வற்புறுத்துவார்கள்.
அவ்வாறான நேரங்களில் எளிடையாக விரைவில் என்ன செய்யலாம் என அம்மா மார்கள் குழம்புவதுண்டு.
கவலை வேண்டாம், வீட்டில் முட்டையும் பிரட்டும் இருந்தால் போதும் வெறும் பத்தே நிமிடங்களில் அட்டகாசமான சுயைில் பிரட் ஸ்நாக்ஸ் எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரட் – 4
முட்டை – 1
பால் – 1/4 கப்
உப்பு – 1/4 தே.கரண்டி
சர்க்கரை – 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை அளவு
ஆரிகானோ/பிட்சா சீசனிங் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
மிளகுத் தூள் – 1/4 தே.கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை
முதலில் பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை அகற்றிவிட்டு வெள்ளை நிற பகுதியை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நீக்கிய அந்த பிரட் பகுதியை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு, நன்றாக பொடித்து ஒரு தட்டில் தனியாக எடுத்துக் வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு பிரட்டின் வெள்ளைப் பகுதியை முக்கோண வடிவில் வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு கிண்ணத்தில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் பால், உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள், ஆரிகனோ/பிட்சா சீசனிங், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, மிளகுத் தூள் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஒரு பிரட் துண்டை எடுத்து, முட்டை பால் கலவையில் பிரட்டி, அதனை பிரட் தூளில் பிரட்டி, ஒரு தட்டில் அடுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட் தூளில் பிரட்டிய பிரட்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அவ்வளவு தான் அட்டகாசமான மொறு மொறு பிரட் ஸ்னாக்ஸ் தயார்.