ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்புதியவைமருத்துவம்

தேன் ஏன் கெட்டுப் போவதில்லை தெரியுமா? ஆச்சரியமான உண்மை

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் தேன் கெட்டுப்போகாமல் இருப்பது ஏன் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பெரும்பாலான உணவுப்பொருட்களுக்கு காலாவதி தேதி என்பது உண்டு. அதனை அவதானித்தே நாம் அன்றாடம் பொருட்களைப் பயன்படுத்துகின்றோம்.

அந்த தேதி முடிந்துவிட்டால் அவை கெட்டுப் போய்விடும். மேலும் புழு மற்றும் வண்டுகள், பூஞ்சை இவைகள் ஏற்பட்டு பயன்படுத்த முடியாமல் ஆகிவிடும்.

Honey: தேன் ஏன் கெட்டுப் போவதில்லை தெரியுமா? ஆச்சரியமான உண்மை | Honey Is Never Expires Do You Know Reason

ஆனால் மருத்துவ குணங்களும், ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்த தேன் மட்டும் கெட்டுப்போகாமல் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஆம் தேன் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அது தனது தன்மையை இழப்பதும் இல்லை… கெட்டுப் போகவும் இல்லை. வாழ்நாள் முழுவதும் கூட அதனை நாம் வைத்து உட்கொள்ள முடியும்.

தேன் ஒருபோதும் கெட்டுப்போகாத உணவுப் பொருளாகும். இது பழையதாகும் போது, மிகவும் சத்தானதாகவும் நன்மை பயக்கவும் செய்கின்றது.

தேன் குறைந்த ஈரப்பதத்தைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளான்களிலிருந்து பாதுகாக்கின்றது மற்றும் கெட்டுப்போவதையும் தடுக்கின்றது.

Honey: தேன் ஏன் கெட்டுப் போவதில்லை தெரியுமா? ஆச்சரியமான உண்மை | Honey Is Never Expires Do You Know Reasonதேனின் pH அளவு 3.2 முதல் 4.5 வரை இருக்கும். இது இயற்கையாகவே அமிலத்தன்மை கொண்டது. இந்த அமிலத்தன்மை காரணமாக, பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகள் உயிர்வாழ முடியாது.

தேன் குளுக்கோஸ் ஆக்சிடேஸ் என்ற நொதியைக் கொண்டுள்ளது. இந்த நொதி குளுக்கோஸை குளுக்கோனிக் அமிலம் மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடாக உடைக்கின்றது, இது பாக்டீரியாக்களைக் குறைக்க உதவுகின்றது.

Honey: தேன் ஏன் கெட்டுப் போவதில்லை தெரியுமா? ஆச்சரியமான உண்மை | Honey Is Never Expires Do You Know Reason

தேன் அதிக சர்க்கரை உள்ளடக்கத்தையும் குறைந்த நீர் உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இது எந்தவொரு சூழலிலும் நீண்ட காலம் நீடிக்குமாம்.

ஆர்கானிக் சர்க்கரை இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக வைக்க சிறந்ததாகக் கருதப்படுகின்றது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker