உடல் எடையை எளிமையாக குறைக்கணுமா… அப்போ காலிஃப்ளவர் சூப் தான் சிறந்த தெரிவு
பொதுவாகவே நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காலிபிளவரில் நிறைச்து காணப்படுகின்றது.
அது இதயநோய்கள், புற்றுநோய் உட்பட பல நோய்களிடமிருந்து பாதுகாப்பு கொடுக்கின்றது.கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளில் காலிஃப்ளவரும் ஒன்று.
உடல் எடை குறைப்புக்கும் முக்கிய பங்காற்றுகின்றது. உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது சிறந்த தெரிவாகும்.
காலிபிளவர் மூளை வளர்ச்சிக்கும் நினைவாற்றலை அதிகரிப்பதற்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.காலிபிளவரில் உள்ள வேதிப்பொருட்கள் புற்று நோய் உருவாவதை தடுக்குகிறது.
அதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கலுக்கு விரைவில் தீர்வு கொடுக்கும் காலிபிளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத் தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது.
மூட்டு வலியை குறைப்பதில் காலிபிளவர் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள் இருப்பதால் இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக காணப்படுகின்றது.
புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. செரிமான கோளாறுகளை சீர்செய்து ஒட்டுமொத்த சமிப்பாட்டு சமிப்பாட்டு தொகுதியின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றது.
இதில் உள்ள இயற்கை குணங்கள் ரத்த நாளங்களை பாதுகாக்கின்றன. அது வீக்கத்தை குறைத்து இதய நோய் ஆபத்தை தடுக்க பெரிதும் துணைப்புரிகின்றது.காலிஃபிளவரை அதிகம் உட்கொள்ளும்போது தமனிகள் தடிப்பது குறையும் என ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த காலிஃபிளவரை வைத்து ஆரோக்கியமாக சூப்பை வீட்டிலேயே எவ்வாறு தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காலிஃப்ளவர் – 1
மிளகுத்தூள் – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 1
பால் – 1 கப்
கோதுமை மாவு – ஒரு தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு தே.கரண்டி
வெண்ணெய் – 5 தே.கரண்டி
பூண்டு – 5 பல்
செய்முறை
முதலில் காலிஃப்ளவர் மற்றும் பூண்டை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு சிறிதளவு காலிஃப்ளவர், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் அல்லது வெண்ணை சேர்த்து குறைந்த தீயில் வைத்து நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு அதே பாத்திரத்தில் சிறிதளவு வெண்ணை விட்டு அரைத்த விழுது மற்றும் கோதுமை மாவை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
பின்பு1 கப் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை கொதிக்க விட்டு இறுதியில் பால் சேர்த்து கிளறி விட வேண்டும். இறுதியில் சிறிது மிளகு தூளை தூவினால் அவ்வளவுதான் அசத்தல் சுவையில் ஆரோக்கியமாக காலிஃப்ளவர் சூப் தயார்.