Uncategorisedஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்புதியவைமருத்துவம்

நகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா.. அப்போ இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க

நீளமான நகங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்குமே இருக்கும்.அதனால் பெண்கள் தங்களின் நகங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

சில பெண்களுக்கு தண்ணீரில் அதிகம் வேலை செய்யும் போது பல நாள் பாதுகாப்பாக வளர்த்த நகம் உடைந்துவிடும். அதனால் ஏற்படும் மனவலியை பெண்களால் மட்டுமே உணர முடியும்.

நகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க  வீட்டிலேயே எளிமையாக மேற்கொள்ளக் கூடிய சில விடயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இரவு தூங்குவதற்கு முன்பு பாதாம் எண்ணெயை லேசாக சூடாக்கி, பருத்தி துணியால் அந்த எண்ணெயை நகங்களின் மேல் தொட்டு வைத்து, இரவு முழுவதும் அப்படியே விட்டு காலையில் கைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நகங்கள் வலுவாக வளர்வதற்கு துணைபுரியும்.

நகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க | How Can You Say That Your Nails Are Healthy

நகம் கடினமாக உள்ளவர்கள் ஆலீவ் ஆயிலைப் பயன்படுத்தினால் நகம் பளபளப்பாக மாறும், வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இவ்வாறு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.

வாரத்திற்கு ஒரு முறை நக இடுக்குகளில் உள்ள அழுக்குகளை அகற்றி, நகத்தை ஷேப் செய்யவும். ஷேப் செய்ய விரும்பாதவர்கள், அதிமாக வளரும் நகங்களை மாத்திரம் வெட்டிவிடலாம்.

நகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க | How Can You Say That Your Nails Are Healthyஅளவுக்கு மீறி வளர்வதும் நகம் உடைவதற்கு காரணமாக அமைகின்றது. நகங்களுக்கும் சுவாசிக்கும் தன்மை இருப்பதால் அடிக்கடி நெயில் பாலிஷ் போடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.

அப்படி நெயில் பாலிஷ் பயன்படுத்தினாலும் சரியான முறையில் நீக்குவது அவசியம். நெயில் பாலிஷ் நீக்குவதற்கு தரமான பிரான்டுகளை பயன்படுத்துவது முக்கியம், இல்லையேல் நகங்கள் நிறம் மாறி வலுவிலக்கும் வாய்ப்பு அதிகமாகவுள்ளது.

நகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கணுமா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் பண்ணுங்க | How Can You Say That Your Nails Are Healthy

ஒரு நாளைக்கு தேவையான தண்ணீரை குடிப்பது நகங்களை ஆரோக்கியமாக பாதுகாப்பதற்கு மிகவும் இன்றியமையாத விடயமாகும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker