இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தினால் விஷமாகும் ஜாக்கிரதை!
பொதுவாகவே உணவுகள் மிஞ்சும் பச்சத்தில் அதனை குளிரூட்டியில் வைத்து மறுநாள் சூடாக்கி சாப்பிடும் பழக்கம் பெரும்பாலானர்களிடத்தில் காணப்படுகின்றது.
உணவுகளை வீண்விரயம் செய்யக்கூடாது என்பதற்காக இவ்வாறு சூடாக்கி சாப்பிட்டாலும் குறிப்பிட்ட சில உணவுகளை சமைத்ததன் பின்னர் மீண்டும் சூடாக்கி உண்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அந்த வகையில் தவறுதலாக கூட மீண்டும் வெப்பமாக்க கூடாத உணவுகள் குறித்தும் அவை ஏற்படுத்தும் ஆபத்து தொடர்பிலும் இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
சிக்கன்
சிக்கன் குழம்பு மிதப்படும் பட்சத்தில் பலரும் அதனை குளிரூட்டியில் வைத்து மறுநாள் மீண்டும் சூடாக்கி சாப்பிடுகின்றனர். ஆனால் சிக்கனை இவ்வாறு மீண்டும் வெப்பமேற்றும் போது அதில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகின்றது. இது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
முட்டைகள்
ஏற்கனவே சமைக்கப்பட்ட முட்டைகளை மீண்டும் சூடாக்கும் போது அதில் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்களின் பெருக்கம் அதிகரித்து செரிமான கோளாறுகள் உட்பட பல்வேறு சமிபாட்டு சிக்கல்களை ஏற்படுத்தும்.
காளான்கள்
காளான்களில் அதிகளவில் புரதம் நிறைந்திருப்பதனால் இதனை சமைத்த பின்னர் மீண்டும் சூடாக்குதால் மிகவும் மென்மையாக மாறுவதுடன் சுவையிலும் மாற்றம் ஏற்படுவதுடன் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் பெருக்கமும் அதிகரித்துவிடும்.எனவே அதனை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
கீரை
கீரை வகைகளை சமைத்த பின்னர் மீண்டும் சூடாக்கவே கூடாது. அதனால் நைட்ரேட்டுகளின் உருவாக வழிவகுக்கும். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். கீரைகளிலும் புரதம் நிறைந்திருப்பதால் மீண்டும் வெப்பமாக்கும் போது பாக்டீரியாக்கள் பெருக்கம் அதிகரிக்கும்.
சாதம்
சாதத்தை மீண்டும் வெப்பமேற்றுவது ஆரோக்கியத்துக்கு பாரிய தீங்கை விளைவிக்கும் காரணம், இது உணவு விஷத்தை உண்டாக்கும் பாக்டீரியாவான பேசிலஸ் செரியஸின் வளர்ச்சிக்கு ஏற்ற நிலையை உருவாக்குகின்றது.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை சமைக்கும் போது பொட்டுலிசத்தை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவை உருவாக்கலாம். இதனை சமைத்த பின்னர் மீண்டும் சூடாக்குவது பாக்டீரியாக்களை அழிப்பதில்லை இதுமட்டுமன்றி உணவில் பரவும் நோய்க்கு முக்கிய காரணமாக அமையும்.
சமையல் எண்ணெய்
ஏற்கனவே சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் சூடாக்கி அதில் சமையல் செய்து சாப்பிட்டால் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். இந்த உணவுகளை ஒருபோதும் மீண்டும் சூடாக்கி சாப்பிடவே கூடாது.