சருமத்திற்கு ஆவி பிடிப்பதனால் கிடைக்கும் பயன்கள் என்னனு தெரியுமா..
சருமத்திற்கு எப்போதும் நாங்கள் இயற்கையான விஷயத்தை செய்யும் போது பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது.
இதை தவிர பல இரசாயனங்களை பயன்படுத்தும் போது சருமம் பொலிவிழந்து காணப்படும்.
அந்த வகையில் வீட்டில் நாம் இயற்கையாக ஆவி பிடிக்கும் போது எமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
முகத்திற்கு ஆவிபிடிக்கும் போது சருமத்தில் இருக்கும் துளைகள் இல்லாமல் போகும். இந்த துளைகளுக்கு உள்ளே அழுக்குகள் இருப்பதால் அது முகப்பருக்களை உண்டாக்கும்.
இந்த பிரச்சனைகள் வராமல் இருப்பதற்கு ஆவி பிடித்தல் சிறந்த தீர்வாகும். ஆவி பிடிப்பதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இறந்த செல்கள் உடலில் இருந்து நீக்கப்படும்.
புதிய செல்கள் வளர்ச்சியடையும். இதனால் தான் சருமம் எப்போதும் பொலிவுடன் காணப்படும். சளி இருமல் பிரச்சனை இருப்பவர்கள் ஆவி பிடித்தால் இந்த பிரச்சனை இல்லாமல் போகும்.
சைனஸ் பிரச்சனை இருப்பவர்கள் ஆவி பிடிப்பது மிகவும் நல்லது. இதனால் சைனஸ் குழியில் உள்ள சளி தளர்ந்து வெளியேறும். ஆவி பிடிக்கும் போது 10 அல்லது 15 நிமிடம் ஆவி பிடித்தல் நல்லது.