ஆந்திரா ஸ்டைல் வாழைக்காய் தேங்காய் வறுவல்
அனைவரும் வித்தியாசமான உணவுகளை விரும்பி சாப்பிடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி வித்தியாசமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும் உணவுகளை நாம் விரும்பி சாப்பிடுவோம்.
அந்த வகையில் எல்லா காலங்களிலும் கிடைக்ககூடிய வாழைக்காயை வைத்து ஒரு ஆந்திரா ஸ்டைல் ரெசிபியை சுலபமாக செய்யலாம்.
இந்த ரெசபிக்கு பெயர் வாழைக்காய் தேங்காய் வறுவலாகும். தொடர்ந்து இந்த பதிவில் வாழைக்காய் தேங்காய் வறுவல் எவ்வாறு செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் – 2
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
உழுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – அரை தேக்கரண்டி
வெங்காயம் – 1
பூண்டு – 7
பல்உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள்- அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
தன்யாத்தூள் – 2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் – அரை கப்
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்யும் முறை
முதலில் 2 வாழைக்காயை எடுத்து தோல் நீக்காமல் நன்றாக தோலின் நிறம் மாறும் அளவிற்கு அவித்து எடுக்க வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்து வந்ததும் உழுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கடுகு போன்றவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
கடுகு நன்றாக பொரிந்து வரும் சந்தர்ப்பத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். பின்னர் பூண்டை எடுத்து அதை உரலில் இடித்து சேர்க்கவும்.
இதை கொஞ்சம் வறுத்து வந்ததும் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் தூள், தனியாத்தூள் போன்றவற்றை சேர்த்து நன்றாக வறுக்கவும்.
இதற்கு பின்னர் அவித்த வாழைக்காயை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
பின்னர் இது பொரிந்து வரும் சந்தர்ப்பத்தில் தேங்காய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுத்தால் வாழைக்காய் தேங்காய் வறுவல் தயார்.