முகம் பளிச்சென்று மின்ன கொய்யா இலை: எப்படி பயன்படுத்தணும்.
மனிதர்களுக்கு கொய்யாப்பழம் ஏகப்பட்ட நன்மைகளை அள்ளித்தரக்கூடிய ஒரு பழமாகும்.
கொய்யா பழத்தை போலவே அதன் இலைகளும் எமது சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றது.
சருமத்தில் எரிச்சல் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளுக்கு கொய்யா இலைகளை பயனபடுத்தி சரி செய்யலாம்.
அவ்வாறான டிப்ஸ்கள் எல்லாவற்றையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
இயற்கையாகவே சருமத்திற்கு அழகான நிறத்தை கொடுக்கும் சக்தி கொய்யா இலைகளுக்கு உண்டு.
இந்த இலைகளை அரைத்து தயிருடன் சேர்த்து முகத்திற்கு பூசி வந்தால் முகத்திற்கு அழகிய நிறம் கிடைக்கும்.
இதை இரவில் தூங்க செல்லும் முன்பாக இவ்வாறு செய்து வந்தால் சருமம் புது பொலிவு பெறும்.
கோடைக்காலங்களில் சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமம் கருப்பாக மாறும். இந்த நேரத்தில் கொய்யா இலைகளை பயன்படுத்தினால் முகத்தின் உண்மையான நிறம் மாறாமல் இருக்கும்.
கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் பூசி வர வேண்டும். அது முகத்தில் உள்ள துளைகளில் படிந்திருக்கும் அழுக்கை அப்புறப்படுத்தி பொலிவைத் தரும்.
ரோஸ் வாட்டரும், முல்தானி மெட்டியும் கலந்து அரைத்து அதனுடன் கொய்யா இலையையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் சருமம் அழகாக இருக்கும். பொடுகு பிரச்சனை இருப்பவர்களும் இதை செய்யலாம்.
எண்ணைய் சருமத்தினை கொண்டவர்கள் கொய்யா இலையை பேஸ்ட் போல அரைத்து எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி வர வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விடலாம்.தினமும் இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.