உடல் எடையைக் குறைக்கும் பார்லி வெஜிடபிள் சூப்.. சுலபமாக செய்வது எப்படி…
பார்லி ரத்த சர்க்கரை, கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க உதவுவதுடன், இதய நோயாளிகளுக்கு பார்லி அற்புதமான உணவாகவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றது.
தேவையான பொருட்கள்
பார்லி தூள் – 2 டீஸ்பூன் (அரிசியை தூளாக்கிக் கொள்ளவும்)
பார்லி அரிசி – 4 டீஸ்பூன்
பீன்ஸ், கேரட் – தலா 50 கிராம்
மிளகு தூள் – 3 டீஸ்பூன்
வெங்காயத்தாள் – சிறிதளவு
துளசி இலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கேரட், பீன்ஸ் மற்றும் வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும், பார்லி அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைத்து பின்பு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்.
இதே போன்று பீன்ஸ் கேரட்டை தனியாக வேக வைத்துக் கொண்ட பின்பு, கடாய் ஒன்றில் வேக வைத்த பார்லி அரிசி, காய்கறிகள் இவற்றினை சேர்க்கவும்.
பின்பு தேவையான அளவு உப்பு, பார்லி தூள், தண்ணீர் இவைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பின்பு மிளகுத்தூள், வெங்காயத்தாள் சிறிதளவு தூவிவிட்டு, இறக்கவும். தற்போது சுவையான பார்லி வெஜிடபிள் தயார்.