உங்க வீட்டு பாத்ரூமை சுத்தமாக வைத்துக்கொள்ள தினமும் இதை செய்தாலே போதும்..
உங்க வீட்டு பாத்ரூமை சுத்தமாக வைத்துக்கொள்ள தினமும் இதை செய்தாலே போதும்..
குளியலறையை சுத்தம் செய்வது யாரும் விரும்பாத ஒரு வேலை என்றே கூறலாம். ஆனால் ஒரு குளியலறையில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் விஷயங்கள், மற்றும் தினசரி வேலைகள் அவற்றை அழுக்கடைய செய்யும். இந்த வேலையை முழுவதுமாக எளிதாக்க நீங்கள் செய்ய வேண்டிய சில அன்றாட பழக்கங்களை சரி செய்தாலே போதுமானது, அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
குளியலறையை சுத்தம் செய்வது யாரும் விரும்பாத ஒரு வேலை என்றே கூறலாம். ஆனால் ஒரு குளியலறையில் தொடர்ந்து பயன்படுத்தப்படும் விஷயங்கள், மற்றும் தினசரி வேலைகள் அவற்றை அழுக்கடைய செய்யும். இந்த வேலையை முழுவதுமாக எளிதாக்க நீங்கள் செய்ய வேண்டிய சில அன்றாட பழக்கங்களை சரி செய்தாலே போதுமானது, அவை என்னென்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
சிங்க்-கை காலை, இரவு சுத்தம் செய்யுங்கள் : ஒவ்வொரு காலை மற்றும் இரவு உங்கள் குளியறையில் உள்ள சிங்க்-கை துடைப்பது நல்லது . இதற்காக நீங்கள் ஈரமான வைப்ஸ் கூட உபயோகிக்கலாம். ஈரமான வைப்ஸ்களை உங்கள் குளியறையில் எப்போதும் வைத்திருப்பது சிறந்த யோசனை. இதனால் நீங்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது எளிதாக துடைக்க முடியும். இதனை பழகுவதற்கு சில நேரம் ஆகலாம், ஆனால் அது உங்கள் குளியலறையை எவ்வளவு சுத்தமாக வைத்து இருக்கிறது என்பதை பார்த்தவுடன் தொடர்ந்து செய்வீர்கள்.
ஷவர் பயன்படுத்திய பிறகு சுவற்றை சுத்தம் செய்யுங்கள் : உங்கள் ஷவரை பயன்படுத்திய பிறகு ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்வது மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் குளித்த பிறகு ஈரமான சுவர்களைத் துடைக்க கூடுதல் நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள், இதனால் ஷாம்பு, சோப்பு கறைகள் சுவர்களில் படிந்திருப்பதை தவிர்க்க முடியும்.
கால் மிதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் : வீட்டு வாசல், குறிப்பாக குளியலறைக்கு வெளியே போட்டிருக்கும் கால் மிதிகளை அடிக்கடி சுத்தம் செய்யுங்கள், இவை மிக விரைவாக அழுக்காகிவிடும், மேலும் உங்கள் குளியலறையின் கதவுக்கு வெளியே மிகவும் கூர்ந்துபார்க்கக்கூடியதாக இருக்கும். எனவே ஒரு வாரத்திற்கு ஒரு முறை அவற்றை சலவை செய்தால் எப்போதும் புதிது போல காட்சியளிக்கும்.
கழிப்பறையை ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்யுங்கள் : உங்கள் கழிப்பறையை நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் சுத்தப்படுத்துவது நல்லது. இது உங்கள் கழிப்பறையில் எந்தவிதமான கெட்ட வாசனை இல்லாமலும், கறைகளையும் தடுக்கிறது. ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பிறகும் நீங்கள் சுத்தம் செய்தால், ஒவ்வொரு நாளும் பயன்படுத்துவதற்கு இது பிரகாசமாக இருப்பதை நீங்கள் காணலாம், மேலும் உடனடியாக சுத்தம் செய்வதால் குறைந்த நேரமே போதுமானதாக இருக்கும்.
பார் சோப்புக்கு பதிலாக திரவ சுத்திகரிப்பான்களை பயன்படுத்துங்கள் : உங்கள் சோப்புக்கு பதிலாக திரவ சுத்திகரிப்பான்களை பயன்படுத்துங்கள். இது அனைவரும் தொடுவதை தவிர்ப்பதால் கிருமி இல்லாதது என்பதை உறுதிப்படுத்துகிறது. எனவே சோப்பிற்கு பதிலாக திரவமாக இருக்கும் ஹேண்ட் வாஷ் போன்றவற்றை பயன்படுத்துங்கள்.
தரையில் துணிகளை வீசக்கூடாது : நீங்கள் வெளியே செல்ல தயாராகும் போது உங்கள் துணிகளை குளியலறை தரையில் வீசுவது எளிது. ஆனால் 30 கூடுதல் வினாடிகளை எடுத்து அவற்றை ஒரு கூடையில் போடுங்கள். நீங்கள் சோர்வாக இருந்துவிட்டால், பிற வேலைகள் உங்களுக்காகக் காத்திருக்கும்போது இவற்றை செய்வது கடினமாக இருக்கும். இதற்காக நேரம் ஒதுக்கி செய்வதை காட்டிலும் இது எளிதானது.
தரையை நன்கு உலர விடுங்கள் : ஹோட்டல் குளியலறைகளை சுத்தம் செய்வதற்கான ரகசியத்தை அறிய வேண்டுமா? உலர்ந்த தளம்! ஆமாம், நீங்கள் குளித்த பிறகு, தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற வேண்டாம், ஆனால் நீங்கள் வெளியேறுவதற்கு முன்பு, உங்களை கால்களை நன்கு துடைத்து விட்டு செல்லுங்கள். இதனால் வீட்டின் தரை ஈரமாவதை தடுக்க முடியும். எனவே உங்கள் வீடு முழுவதும் சுத்தமாக இருக்கும்.