உறவுகள்புதியவை

திருமண வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்க வேண்டுமா..? இந்த விஷயங்களை செய்தாலே போதும்…

திருமண வாழ்க்கை மிகச்சிறப்பாக இருக்க வேண்டுமா..? இந்த விஷயங்களை செய்தாலே போதும்...

உங்கள் துணையை எதிர்மறையான வார்த்தைகளால் விமர்சிப்பதைத் தவிருங்கள். அவர் ஏதேனும் புது விஷயங்கள் செய்ய முன்னெடுத்தால் அதை எதிர்மறையாக சொல்லி விமர்சிக்காதீர்கள்.

மண வாழ்க்கை சுமூகமாக அமைந்தாலே மற்ற அனைத்து விஷயங்களும் சிறப்பாக அமைந்துவிடும். அதற்கு நாம் பெரிதாக மெனக்கெடத் தேவையில்லை. சில விஷயங்களை நம் துணைக்காக மாற்றிக் கொண்டாலே போதும். வாழ்க்கை இன்பமானதாக அமையும். அதற்கான வழிமுறைகளைக் கீழேக் காணலாம்.

துணையை விமர்சிப்பத்தைத் தவிருங்கள்: உங்கள் துணையை எதிர்மறையான வார்த்தைகளால் விமர்சிப்பதைத் தவிருங்கள். அவர் ஏதேனும் புது விஷயங்கள் செய்ய முன்னெடுத்தால் அதை எதிர்மறையாக சொல்லி விமர்சிக்காதீர்கள். அவ்வாறு செய்வதால் அது அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும். அதேபோல் தொடர்ந்து உங்களிடமிருந்து எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே கேட்டால் அந்த உறவில் அவர்களுக்கு சளிப்பை ஏற்படுத்திவிடும்.

துணையின் செயல்களைப் பராட்டுங்கள்: பாராட்டுகள் பொதுவாகவே நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் செய்து கொள்ளும் பாராட்டுகள் வாழ்கையை இன்பமானதாக மாற்றும். அதற்கு அவர்கள் பெரிதாக ஏதேனும் செய்தால்தான் பாராட்ட வேண்டும் என்றில்லை. உங்களுக்காக அவர் செய்யும் சின்னச் சின்ன செயல்களைக் கூட பாராட்டலாம். அவ்வாறு செய்வதால் அது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும். இதனால் அடுத்தமுறை இன்னும் உங்களுக்கு பிடித்தவாறு பல செயல்களைச் செய்வார்கள். இதனால் நீங்களும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

துணையிடம் தேங்ஸ் மற்றும் சாரி சொல்லப் பழகுங்கள்: அது ஏனோ முகம் தெரியாத நபரிடம் எளிதில் தேங்ஸ் மற்றும் சாரி சொல்கிறீர்கள். ஆனால் துணையிடம் மட்டும் சொல்லத் தடுமாறுகிறீர்கள். இந்த இரு விஷயங்கள்தான் உங்கள் உறவில் விட்டுக் கொடுக்கும் போக்கை வளர்க்கிறது. உங்கள் இணைப்பை அர்த்தமானதாக மாற்றுகிறது. உங்களுக்குள் இருக்கும் ஈகோவைத் தூக்கி எறியுங்கள். அடுத்த முறை நீங்களே தேங்ஸ் மற்றும் சாரி சொல்லிப் பாருங்கள். உங்கள் உறவில் சிறந்த மாற்றத்தைக் கட்டாயம் உணர்வீர்கள். இப்படி ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் உறவை நீண்ட நாட்கள் பயணிக்கச் செய்யும்.

உறவில் அந்நியர்களை அனுமதிக்காதீர்கள்: மூன்றாம் நபர்களின் உறவு உங்கள் காதல் உறவைச் சிதைப்பதாக உணர்ந்தால் உடனே அவர்களின் நட்பை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் செலவழிக்கும் நேரம் குறைவதைப் போல் உணர்ந்தால் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து உடனே சரிசெய்யுங்கள். ஏனெனில் அது உங்கள் இருவருக்குள்ளான விரிசலை அதிகரிக்கும். ஒருவரையொருவர் பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள் குறைந்துவிடும். அதேபோல் அந்நியர்கள் உங்கள் வாழ்கைக்குள் நுழைந்து கருத்துக்கள் சொன்னாலும் அதை ஏற்காதீர்கள். ஒருவேளை அவரின் ஆதிக்கம் உங்கள் வாழ்கைக்குள் அதிகமாக இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள்.

கேட்ஜெட்டுகளை தவிருங்கள்: கேட்ஜெட்டுகள்தான் இன்று பல உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்துகிறது. இதனால் கணவன் மனைவி இருவரும் முகம் பார்த்துப் பேசுவதும் குறைந்துக் கொண்டே வருகிறது. எனவே உங்கள் துணையுடன் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை உன்னதமானதாக மாற்ற உங்கள் கேட்ஜெட்டுகளை அணைத்து விட்டு. பொன்னான நேரத்தை ஆத்மார்தமாக செலவிடுங்கள்.

வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்: எந்த ஒரு செயலையும் இருவரும் பகிர்ந்து செய்வது, உங்கள் நெருக்கத்தை அதிகரிக்கும். உதாரணமாக சமையல், வீட்டை சுத்தம் செய்தல் போன்ற வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும் போது வீட்டில் டி.வி பார்க்காமல், செஸ், கேரம், டென்னிஸ் என ஏதேனும் ஒரு விளையாட்டை இருவரும் இணைந்து விளையாடுங்கள். அது உங்கள் உறவை மேலும் அழகாக்கும்.

காதலைப் பகிர நேரம் ஒதுக்குங்கள்: வார இறுதி நாட்களில் உங்கள் துணையுடன் வெளியே செல்லுங்கள். நீண்ட தூர பைக் பயணம் செய்யுங்கள். உங்கள் துணைக்கு பிடித்த சின்ன சின்ன விஷயங்களை அவர்களுக்கு சர்ப்ரைஸ் செய்யுங்கள். ஒரு ஐஸ்க்ரீம் வாங்க ஒரு கிலோ மீட்டர் நடந்து செல்லுங்கள். இப்படி உங்கள் காதலை ஆழமானதாக மாற்ற ஆயிரம் செய்யுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker