புதியவைவீடு-தோட்டம்

மழைக்காலங்களில் ஆடைகளில் வீசும் துர்நாற்றத்தை போக்குவது எப்படி? சூப்பரான டிப்ஸ்

மழைக்காலங்களில் ஆடைகளில் வீசும் துர்நாற்றத்தை போக்குவது எப்படி? சூப்பரான டிப்ஸ்

மழைக்காலம் வந்துவிட்டாலே துணிகள் சரியாக ஈரப்பதம் காயமல் ஒரு வித புணுக்கு நாற்றம் வீசக்கூடும். இந்த பூஞ்சை நாற்றத்தை சரிசெய்ய வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்ற பொருட்களை நாம் பயன்படுத்தலாம்.

மேலும் மழைக்காலத்தில் ஆடைகளை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என அறிந்து கொள்வோம். மழைக்காலத்தில் வீசும் பூஞ்சை நாற்றத்தை தடுக்க பேக்கிங் சோடா மற்றும் வினிகரை கொண்டு பயன்படுத்தி வந்தால் இதை தடுக்கலாம்.

மேலும், அலமாரி அடுக்கில் கீழே வைக்கப்பட்டுள்ள ஆடைகளை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தாமல் இருக்காதீர்கள். அதிலும், ஸ்வொர்ட்டர் போன்ற ஆடைகள் உங்களுக்கு பிரச்சினையை உண்டாக்கும். இந்த ஆடையில் உள்ள துர்நாற்றம் நீங்க நறுமணமிக்க சலவை பொருட்கள், பேக்கிங் சோடா மற்றும் வினிகரை பயன்படுத்துங்கள்.

அடுத்ததாக ஆடைகளில் இருக்கும் பூஞ்சை தொற்றை நீக்க வாசனை திரவியங்களை பயன்படுத்தாதீர்கள். இது தற்காலிகமாக பூஞ்சை தொற்றை போக்குமே தவிர முழுவதுமாக போக்காது. அதே மாதிரி துணிகளை மென்மைப்படுத்தும் மென்மையாக்கிகளை பயன்படுத்த வேண்டாம்.

அதே மாதிரி வாஷிங் மெஷினை நன்றாக சுத்தம் செய்து உலர வைத்து பயன்படுத்துங்கள். ஏனெனில் வாஷிங் மெஷினில் தேங்கி நிற்கும் ஈரப்பதம் கூட உங்களுக்கு பூஞ்சை தொற்றை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

பயன்படுத்தும் முறை

  • ஆடைகளை முதலில் வினிகரைக் கொண்டு அலசுவது நல்லது. வாஷிங் மெஷினில் வெதுவெதுப்பான நீர் மற்றும் வினிகர் கொண்டு அலசுங்கள்.
  • வாஷிங் மெஷினில் துணிகளை ஒரே இடத்தில் குவிக்காமல் சமமாக போட்டு வொயிட் வினிகரை பயன்படுத்துங்கள். வினிகரின் அமிலத்தன்மை துணிகளில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகிறது.
  • இந்த சலவைக்கு அப்புறம் துணிகளில் உள்ள பூஞ்சை தொற்று ஓரளவுக்கு குறைந்து விடும். துணியை அலசும்போது செய்ய வேண்டிய விஷயம் இது.
  • ஒருமுறை அலசி எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக, தண்ணீரில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடாவைக் கலந்து அந்த நீரில் துணிகளை நன்கு விரித்து அலசி எடுங்கள்.
  • இதை குளிர்ந்த நீரில் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இது துணிகளில் மீதமுள்ள துர்நாற்றத்தை போக்க உதவுகிறது.
  • மேலும், சூரிய ஒளியில் துணிகளை உலர வைப்பது துணிகளில் உள்ள பாக்டீரியாக்களை போக்க உதவி செய்கிறது. வாஷிங் மெஷினில் உள்ள ட்ரையரில் கூட துணிகளை காய வைத்து பயன்படுத்தலாம். நன்றாக உலர்ந்த பிறகு ஆடைகளை மடித்து வையுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker