ரமலான் ஸ்பெஷல்: கிளாசிக் பட்டர் சிக்கன்
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் – 300 கிராம்
* தயிர் – 1/2 கப்
* இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – 1 டீஸ்பூன்
பட்டர் சிக்கன் மசாலாவிற்கு…
* பட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* அரைத்த தக்காளி விழுது – 1 கப்
* தேன் – 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் – 1/4 கப்
* உலர்ந்த வெந்தயக் கீரை – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் பௌலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் தயிர், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசைந்து குறைந்தது ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளைப் போட்டு, சிக்கனை 4 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின் அதே வாணலியில் அரைத்த தக்காளி விழுது, உப்பு, மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, சிக்கனை 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதன் மேல் பிரஷ் க்ரீம், தேன் மற்றும் உங்களுக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் சிக்கன் முற்றிலும் வேகும் வரை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் உலர்ந்த வெந்தய கீரை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் தயார்.