குழந்தையின் வாயுவை அகற்ற மசாஜ் போதுமானது, எப்படி மசாஜ் செய்வது தெரிந்துகொள்ளலாம்!
குழந்தை வளர்ப்பில் மசாஜ் செய்வது என்பது தனித்துவம் வாய்ந்தது. இந்த மசாஜ் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு வாயு பிரச்சனைகளும் வெளியேற்ற முடியும்.
பிறந்த குழந்தைகளுக்கு குளியல் நேரத்தில் செய்யும் மசாஜ் இதமானது. இது குழந்தையின் வயிற்றுக்கும் குடலுக்கும் நன்மை செய்யக்கூடும். இந்த மசாஜ் செய்வதன் மூலம் குழந்தைக்கு உண்டாகும் வாயுவை வெளியேற்றமுடியும்.
குழந்தைக்கு வாயு பிரச்சனை ஏற்பட்டால் அதிக அசெளகரியத்தை உண்டாக்கும். இதனால் பால் குடிக்க மாட்டார்கள். எப்போதும் அழுது கொண்டே இருப்பார்கள். தூக்கமின்மை பிரச்சனையை கொண்டிருப்பார்கள். மசாஜ் வழியாக குழந்தையின் வாய்வு வெளியெற்ற என்ன செய்வது என்று பார்க்கலாம்.
குழந்தைக்கு மசாஜ்
குழந்தைக்கு மசாஜ் செய்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். இது வயிற்றில் சிக்கியிருக்கும் காற்றை வெளியேற்ற உதவுகிறது. குழந்தையின் ஒட்டு மொத்த வளர்சிக்கும் மென்மையான மசாஜ் உதவுகிறது. இது வயிறு மற்றும் குடலில் இருக்கும் காற்றை வெளியேற்ற செய்கிறது.
தொப்பை மசாக் செய்வதன் மூலம் குழந்தையின் வயிற்றின் கீழ் வலது பக்கத்திலிருந்து தொடங்கி வயிற்றில் இடது பக்கமாக முடிவடையும். மசாஜ் செய்யும் முறை குறித்து பார்க்கலாம்.
முழங்காலில் அழுத்தம்
உங்களது ஆள்காட்டி விரலை முழங்கால்களுக்கு பின்னால் வைத்தபடி குழந்தையின் முழங்கால்களை வயிற்றை நோக்கி வளைக்கவும். இப்போது மெதுவாக அழுத்தியபடி முழங்கால்களை குழந்தையின் வயிற்றில் வைக்கவும். இதன் மூலம் வாயுவை எளிதாக அகற்ற முடியும். முழங்கால்களை வயிற்றின் மீது அழுத்தும் போது மென்மையாக அழுத்தவும். அதிக வேகம் வேண்டாம்.
கடிகார திசையில் அழுத்தம்
குழந்தையின் வயிற்றை கடிகாரத்தின் நடு முட்களாக கற்பனை செய்து விடுங்கள். இப்போது கடிகாரத்தில் 7 மணியாக கணக்கில் வைத்து கால்களை கடிகார முள்கள் போன்று பொறுமையாக சுற்றி எடுங்கள். அவசரம் வேண்டாம்.
பொறுமையாக இடதுபுறமிருந்து வலது புறமும், வலது புறத்திலிருந்து இடது புறமும் என மென்மையான இயக்கத்தை தொடருங்கள். இருபுறமும் மூன்று முதல் ஐந்து முறை வரை செய்யலாம்.
ஆங்கில எழுத்தை எழுதுங்கள்
குழந்தையின் வயிற்றில் மென்மையாக அழுத்தத்தோடு ஆங்கில எழுத்தை எழுதலாம். உங்கள் ஆள்காட்டி விரலும் நடுத்தர விரலும் என இரண்டையும் ஒன்றாக்கி குழந்தையின் வயிற்றின் வலது பக்கத்திலிருந்து தொடங்கி ஐ என்னும் ஆங்கில வார்த்தையை தொடங்கவும் பிறகு எல் என்னும் எழுத்தை பக்கவாட்டில் விரல்களை கொண்டு வந்து முடித்துவிடுங்கள்.
குழந்தையின் தொப்பை கீழ் யூ என்னும் அழுத்தை இடது புறமிருந்து தொடங்குங்கள். பிறகு மேல் நோக்கி வலது புறம் திரும்புங்கள். இந்த மசாஜ் செய்யும் போது உங்கள் கண்கள் குழந்தையின் கண்களோடு பேசட்டும். குழந்தையிம் முகம் உங்களை நோக்கி மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
வயிற்றை மென்மையாக கீழ்புறமாக அழுத்தி எடுங்கள்
இதை கவனமாக செய்ய வேண்டும். உங்கள் கைகளை ஐந்து விரல்களும் குழந்தையின் வயிற்றில் இருக்கட்டும். சிறிய விரல் வயிற்றை நோக்கி இருக்கட்டும். இப்போது குழந்தையின் விலா எலும்புக்கூண்டுக்கு கீழ் மெதுவாக மென்மையாக அழுத்தியபடி குழந்தையின் வயிற்றின் நீளத்தை கைகளை கொண்டு மென்மையாக கீழே தள்ளுவது போல் செய்யுங்கள்.
கட்டைவிரல்களில் அழுத்தம்
கட்டை விரல்கள் இரண்டையும் குழந்தையின் இடுப்பில் பிடித்து வைக்கவும். இரண்டு கட்டை விரல்களையும் குழந்தையின் வயிற்றில் தொப்பை மேல் வைக்கவும். இப்போது மெதுவாக கட்டை விரலை அழுத்தியபாடி ஒரே நேரத்தில் வயிற்றில் இருந்து அடிவயிற்றின் கீழ் பக்கங்களில் இறக்கவும். இப்படி செய்யும் போது இரண்டு கட்டை விரல்களும் ஒன்றுக்கொன்று எதிரெதிர் திசையில் நகர வேண்டும்.
சூரியன் மற்றும் சந்திரன் மசாஜ்
குழந்தையின் தொப்புள் பகுதியில் இருந்து கடிகார திசையில் சூரியனின் முழு வடிவமும், நிலவின் அரை வடிவத்தையும் போன்று விரல் நுனியை பயன்படுத்த வேண்டும். ஒரு கையால் முழு வட்டம் வரையுங்கள். மறுபுறம் அரை வட்டம் வரையுங்கள். மசாஜ் செய்யும் போது குழந்தையின் முகத்தில் உண்டாகும் மாறுதல்களையும் கண்டுபிடியுங்கள்.
மேற்கண்ட ஒவ்வொரு மசாஜ் முறையும் 3 முதல் 4 முறை செய்யலாம். வாயு பிரச்சனையை அதிகம் எதிர்கொள்ளும் போது தினமும் இரண்டு முறை இதை செய்யலாம். குழந்தையின் வயிற்றில் நேரடியாக அம்மாக்கள் தங்களது கைகளை வைத்து செய்யும் மசாஜ் இது. இதனால் குழந்தைக்கு அரவணைப்பும் கிடைக்கும்.
மசாஜ் குறிப்புகள்
மாசாஜ் செய்யும் போது குழந்தையின் முகத்தில் மாறுதலை கண்டால் உங்கள் மசாஜ் குழந்தைக்கு வலி தருவதால் இருக்கலாம். மென்மையான மசாஜ் செய்வது மிகவும் அவசியம். உங்கள் வலுவை குழந்தையிடம் காண்பிக்க கூடாது.
குழந்தைக்கு தொப்பை மசாஜ் தொடங்குவதற்கு முன் சங்கடமாக மாறினால் உடனடியாக மசாஜ் செய்வதை நிறுத்துங்கள். காலை நேரத்தில் மசாஜ் செய்வது நல்லது. மசாஜ் செய்யும் போது குழந்தையை மென்மையான தொடுதலோடு தொடங்குங்கள்.
குழந்தை மசாஜ் செய்யும் போது கைகளை பிடித்து விலக்கினால் குழந்தை மசாஜ் செய்வதை விரும்பவில்லை என்று புரிந்துகொள்ளுங்கள். குழந்தைக்கு மசாஜ் செய்த பிறகு ஒரு மணி நேரம் காத்திருங்கள்.
குழந்தையை மென்மையான பாய் அல்லது பருத்தி துணிகளை போட்டு குழந்தையை கீழே வைக்கலாம். மசாஜ் செய்வதற்கு தரமான எண்ணெய் அல்லது லோஷனை பயன்படுத்துங்கள். எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் அதற்கு முன்பு குழந்தையின் சருமத்தில் பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.