உடனே கட்டிகள் பழுத்து உடைய அருமையான நாட்டு வைத்தியம், ட்ரை பண்ணுங்க
கட்டிகள் மற்றும் வீக்கம் தோன்றக் காரணங்கள்:
சுகாதாரமற்ற செயற்கை வாசனை அதிக அளவில் சேர்க்கப் பட்ட அதிக காரத் தன்மை கொண்ட கொழுப்பு வகை உணவுகள் அதிகம் சாப்பிடுவதன் மூலம் சிலருக்கு கட்டிகள் ஏற்படலாம். அதிக எண்ணெய்ப் பிசுக்குகள் காரணமாக அழுக்குகள் சேர்ந்தாலும், சிலருக்கு கட்டிகள் வரலாம்.
சிலருக்கு அதிக உடல் சூட்டினாலும், சூட்டுக் கட்டிகள் வரலாம். சிலருக்கு நீரிழிவு பாதிப்பின் காரணமாக, ஏற்படலாம். மேலும் சிலருக்கு, அதிக அளவிலான மதுப் பழக்கத்தின் மூலம் உடலில் ஏற்பட்ட நச்சுத் தன்மை அதிகரிப்பின் காரணமாக ஏற்படலாம். அதிக உடல் எடையின் காரணமாகவும் சிலருக்கு கட்டிகள் ஏற்படலாம்,
மேலும், பல்வேறு வகை கட்டிகள் மற்றும் வீக்கங்கள் நடுத்தர வயது ஆண்களையே, அதிகம் பாதிக்கின்றன.
எப்படி அறிவது?
சாதாரணக் கட்டிகள் வலிக்காது, சமயத்தில் அவற்றின் அளவுகள் மாறு பட்டாலும், அவை அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. இந்த வகைக் கட்டிகளே, கொழுப்புக் கட்டிகள் எனக் கூறப்படுகின்றன. இவை உடலின் அதிகப்படியாக சேர்ந்த கொழுப்புகளின் காரணமாக உருவாகி, இந்தக் கட்டிகள், உடல் கை கால் மற்றும் இணைப்புப் பகுதிகளில் அதிகம் காணப்படும். கொழுப்புக் கட்டிகள் பொதுவாக, மனிதர்களுக்கு எந்தவித பாதிப்பையும் தருவதில்லை,
வாழைப்பழம்
உடையாத கட்டிகளுக்கு வாழைப்பழத்தை குழைத்து கட்டியின் மீது பூசிவர கட்டி பழுத்து உடைந்து சீழ் வெளியேறி புண் ஆறும்