சமையல் குறிப்புகள்புதியவை
டல்கோனா காபி செய்வது எப்படி?
தேவையானவை
- காபி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன்
- சுடுநீர் – 2 டேபிள் ஸ்பூன்
- பால் – அரை டம்ளர்
- ஐஸ் கட்டி – சிறிதளவு
செய்முறை
பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து, பின்னர் குளிர்சாதன பெட்டியில் குளிர வைத்துக்கொள்ளுங்கள்.
அகன்ற கிண்ணத்தில் காபி தூள், சர்க்கரையை போட்டு அதில் சுடுநீரை ஊற்றி நன்கு அடித்து கலக்குங்கள்.
காபி தூள் நன்றாக கலந்து கிரீம் பதத்தில் இருக்க வேண்டும்.
தொடர்ந்து குளிரவைத்த பாலை எடுத்து டம்ளரில் முக்கால் பங்கு ஊற்ற வேண்டும்.
அதில் ஐஸ்கட்டியை போடவேண்டும். பின்னர் காபி கிரீமை மேல்பரப்பில் ஊற்றி லேசாக கலக்கி பருகலாம்.