இதை 45 நிமிடம் செய்யுங்கள்: காது கோளாறுகளே வராது
காது தொடர்பாக ஏற்படும் கோளாறுகளை தடுக்க உதவும் சூன்ய முத்திரை. இதை தினமும் 45 நிமிடங்கள் செய்தாலே போதுமாம்.
சூன்ய முத்திரை செய்வது எப்படி?
முதலில் விரிப்பில் அமர்ந்து கொண்டு நடு விரல் கட்டை விரலின் அடிப்பகுதியை தொட வேண்டும். பின் கட்டை விரல் வளைந்து நடு விரலின் கனுவை தொட வேண்டும்.
மேலும் இந்த சூன்ய முத்திரையை செய்யும் போது, இரண்டு கைகளையும் பயன்படுத்தக் கூடாது.
சூன்ய முத்திரை செய்வதால் ஏற்படும் நன்மைகள்
சூன்ய முத்திரை காது கோளாறுகளுக்கு சிறந்தது. வலது காதில் பாதிப்பு இருந்தால் இந்த முத்திரையை வலது கரத்தால் செய்ய வேண்டும். அதே போல் இடது காதில் ஏற்படும் கோளாறுகளுக்கு இடது கரத்தால் செய்ய வேண்டும்.
காது கோளாறு உள்ளவர்கள் இந்த முத்திரையை அடிக்கடி, 45 நிமிடமாவது செய்ய வேண்டும். அதனால் நல்ல தீர்வினைக் காணலாம்.
குறிப்பு
காது கோளாறு இல்லாதவர்கள் இந்த சூன்ய முத்திரையை செய்யக் கூடாது. ஏனெனில் அது காதுகளில் அடைப்பு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.