புதியவைவீடு-தோட்டம்

வீட்டை டக்கென சுத்தம் செய்ய வீட்டுக்குறிப்புகள்

வீட்டை சுத்தமாக வைத்தால்தான் நமக்கு நோய்கள் வராது. வீடுகளை அழகாகவும், சுத்தமாக வைத்தால் அந்த வீட்டின் மதிப்பே அதிகம்.

வேலை முடித்து வீட்டு வரும்போது வீடு சுத்தமாக இருந்தால் அந்த நிம்மதியே ஒரு வித்தியாசமானது. வீட்டை கோயில்மாதிரி ஆக்குவதும், குப்பையாக ஆக்குவது நமது கையில்தான் இருக்கு.

கீழ்கண்ட பொருட்களை வைத்து எப்படி வீட்டை சுத்தம் செய்வது என்று பார்ப்போம்:

பிரெட் பந்துகள்

பிரெட்டுகளின் ஓரங்களை நீக்கி, பந்து போல மீதமுள்ள பிரட்டை உருட்டிவைத்துக் கொள்ள வேண்டும். கிச்சனில் கரைகள் ஏற்பட்டிருந்தால் கரைகளின் மீது இந்த பிரட் பந்தை வைத்து அழுத்திதுடைத்தால் கரை ஈஸியாக நீங்கும். இதை ஸ்பாஞ்ச் போல கூட பயன்படுத்துங்கள். காப்பி மேக்கர், தூசி மற்றும் போட்டோ ஃபிரேம்களை சுத்தம் செய்ய இது பெரிதும் பயன்படும்.

உருளை கிளீனர்

துருபிடித்த வடைச்சட்டியை நிமிடங்களில் சுத்தமாக மாற்ற உருளைக்கிழங்கை பாதியாக வெட்டிக் கொண்டு, அதில் உப்பு மற்றும் எண்ணெயை தடவி தேய்த்தால் துருபிடித்த வடைச்சட்டி பளிச்சென்று மாறும்.

கிளீன் கழிப்பறை

பேக்கிங் சோடா, சிட்ரிக் ஆசிட் மற்றும் டிஷ்வாஷ் லிக்விட்டை கலந்து சிலிக்கான் மோல்டுகளில் காயவைத்து, பின்னர் இவற்றை கொண்டு கழிப்பறைகளை சுத்தம் செயதால் நாற்றமின்றி சுத்தமாக இருக்கும்.

கரைகளின் அழிவு

காய்கறியை நறுக்கும் கட்டிங் போர்ட்டை சுத்தம் செய்ய எலுமிச்சையில் உப்பைத் தடவி போர்ட்டை நன்றாக தேய்த்தால் சிறிது நேரத்தில் கரைகள் நீங்கிவிடும.

சுத்தமான நாற்காலிகள்

மைக்ரோ ஃபைபர் சோபாக்களின் மீது கரைகள் ஏற்பட்டால் நூறுசதவீதம் ஆல்கஹால்லில் பிரஷ்ஷை கொண்டு அதை நன்கு தேய்த்தால் கரைகள் உடனே பளிச்சென்று மாறிவிடும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker