வீட்டு கிச்சனில் ஒரே எறும்புகள் தொல்லையா .? இந்த எளிய வீட்டுக் குறிப்பை டிரை பண்ணி பாருங்க..!
எந்த பொருளை கிச்சனில் வைத்தாலும் எறும்புகள் வந்து மொய்க்க வீட்டுப் பெண்களுக்கு கடுமையான டென்ஷன் ஆகிவிடும். அவற்றை பத்திரப்படுத்தி வைக்கவே நேரம் சரியாக இருக்கும். ஆனாலும் அவை எப்படியாவது மோப்பம் பிடித்து வந்துவிடும். இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன..? இதோ அதே கிச்சனிலேயே இருக்கு டிப்ஸ்… அவை என்னென்ன பார்க்கலாம்.
சாக்குக் கட்டிகள் : சாக்குக் கட்டிகளில் இருக்கும் கால்சியம் கார்பனேட் எறும்புகளுக்கு எதிரி. எனவே அதை தூளாக்கி எறும்பு வரும் இடங்களில் தூவி விடுங்கள்.
சிட்ரஸ் : எலுமிச்சை , ஆரஞ்சு பழ தோல்களை எறும்பு நுழையும் இடத்தில் வைத்தால் எறும்பு வந்த இடம் பார்த்து திரும்பி ஓடிவிடும். அதன் சாறை பிழிந்துவிட்டாலும் நல்லது.
மிளகு : மிளகு தூளை தண்ணீரில் கரைத்து அதை எறும்புகள் வரும் இடம் முழுவதும் ஸ்பிரே செய்து விடுங்கள். மிளகின் கார நெடியில் தெறித்து ஓடிவிடும். மிளகை தூளாகவும் தூவலாம்.
உப்பு : உப்பை எறும்புகள் நுழையும் மூலைகளில் தூவிவிட அவை வீட்டிற்குள்ளே நெருங்காது.
வினிகர் : வெள்ளை வினிகர் மற்றும் தண்ணீர் இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்கு கலந்துவிட்டு எறும்புகள் வரும் இடங்களில் ஸ்பிரே செய்துவிட்டால் எறும்பு தொல்லையே இருக்காது.
பட்டை : பட்டை மற்றும் கிராம்பை பொடி செய்தோ அல்லது அப்படியேவோ எறும்புகள் வரும் இடம் முழுவதும் வைத்தால் அவை வராது.
பெப்பர் மிண்ட் : பெப்பர்மிண்டின் வாசனையும் எறும்புகளுக்கு எதிரி. எனவே அதை எறும்புகள் நுழையும் இடத்தில் தெளித்துவிடுங்கள்.
பூண்டு : பூண்டு பற்களை நசுக்கி அதை தண்ணீரில் நன்கு கலந்துவிட்டு எறும்புகள் வரும் இடத்தில் ஸ்பிரே செய்து விடுங்கள்.. அவை வந்த இடம் தெரியாமல் காணமல் போகும்.