கிளாமர் லுக்
அடர் நிற உதடுகள், ஸ்மோக்கி கண்கள் தான் இன்றைய ஸ்டைல் ஸ்டேட்மென்ட் என்கிறார் மதுரா சன்சாரே.
முகம்
முகத்தை சுத்தப்படுத்தி, டோனரை அப்ளை செய்யவும். முகத்தில் மாய்ஸ்சுரசரை தடவுங்கள். இது சருமத்தை ஈரப் பதத்துடன் வைத்திருக்கும். பிறகு பிரைமரை பூசவும். அதைத் தொடர்ந்து சரும நிறத்திற்கு ஏற்ற ஃபவுண்டேஷனை தடவுங்கள். கருவளையம், கரும்புள்ளிகளை மறைக்க கன்சீலரை தடவுங்கள். இறுதியாக பவுடரை பூசவும்.
கன்னங்கள்
உங்கள் முகத்தில் பிரகாசத்தை அதிகரிக்க பீச் பவுடரை கன்ன எலும்புகளில் பூசவும். பவுடரை சருமத்தில் நன்றாக பிளெண்ட் செய்யவும். இது உங்களுக்கு இயற்கையன தோற்றம் மற்றும் பொலிவை தரும்.
கண்கள்
ஸ்மோக்கி கண்களை சுலபமாகப் பெற, பிரவுன், கறுப்பு ஐஷாடோவை ஒன்றாக பிளெண்ட் செய்து, கறுப்பு நிறத்தில் அடர்த்தியான விங் ஸ்டைலை ஐலைனரால் வரையவும். கண்மையை திக்காக இடுங்கள். பிரஷ் ஷால் ஸ்மட்ஜ் செய்து, மஸ்காராவோடு முடிக்கவும்.
உதடுகள்
உதட்டில் முதலில் பிரைமரை பூசவும். டார்க் சிவப்பு நிற லிப் பென்சில் பயன்படுத்தி உதட்டில் கோடு வரையவும். மேட் ஆக்ஸ்பிளட் லிப்ஸ்டிக்கை உதட்டில் பூசவும்.
உங்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளுதல்
வேலை இடத்திற்கு
ஸ்மோக்கி கண்களை தவிர்த்துவிட்டு கிளாஸி தோற்றத்தை தரும் விங் ஐலைனரை முயற்சி செய்யவும்.
திருமண நிகழ்விற்கு
கறுப்பு ஐஷா டோவிற்கு பதில் பிரவுன் ஷிம்மர் ஐஷா டோவைப் பயன் படுத்தவும்.
காதலருடன் டேட்
ஸ்மோக்கி கண்களுக்கு பதில் அடர்த்தியான மஸ்காராவை தேர்வு செய்யுங்கள். மேட் ஐஷாடோவும் உங்களுக்கு கைக்கொடுக்கும்.