சமையல் குறிப்புகள்புதியவை
வீட்டிலேயே செய்யலாம் மாம்பழ ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள் :
- பெரிய மாம்பழம் – 2
- பால் – 1 கோப்பை
- வெண்ணிலா ஐஸ்கிரீம் – 1 கோப்பை
- ஜெல்லி – 2 மேஜைக் கரண்டி
செய்முறை :
- பாலை சுண்டக் காய்ச்சி குளிர வைக்கவும்.
- மாம்பழத்தை கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
- அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக் கொள்ளவும்.
- குளிரவைத்த பாலுடன் ஜெல்லி சேர்த்து நன்கு அடித்துக் கலந்து, அதனையும் மாம்பழச் சாறுடன் சேர்க்கவும்.
- பால் கலந்த மாம்பழச்சாற்றை குளிர்சாதனப் பெட்டியில் சுமார் 2 மணி நேரம் வைத்து குளிர வைக்கவும்.
- பின்னர் வெளியே எடுத்து வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்