சமையல் குறிப்புகள்புதியவை

மிக்ஸ்டு வெஜ் முட்டை புர்ஜி

தேவையான பொருட்கள் :

நறுக்கிய காய்கறி கலவை (கேரட் பீன்ஸ் கோஸ் பச்சைப் பட்டாணி குடமிளகாய் காலிஃப்ளவர்) – ஒரு கப்

பூண்டு – 10 பல்
தோல் சீவிய இஞ்சி – சிறிய துண்டு
கரம் மசாலாத்தூள் – சிறிதளவு
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
மிளகாய்த்தூள் – தேவையான அளவு
தனியாத்தூள் (மல்லித்தூள்) – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.



செய்முறை:

  • பூண்டு, இஞ்சி, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • காலிஃப்ளவரை உப்பு கலந்த வெந்நீரில் போட்டு எடுக்கவும்.
  • வாணலியில் எண்ணெய்விட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் அதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி குழைய வதங்கியதும் அதில் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
  • அடுத்து அதில் மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடி போட்டு வேகவிடவும்.
  • காய்கறிகள் வெந்தவுடன் அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
  • முட்டை வெந்து உதிரியாக வந்ததும் மேலே கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.



Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker