சமையல் குறிப்புகள்புதியவை
முட்டை சேர்க்காத கேரட் கேக்
குழந்தைகளுக்கு கேக் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று வீட்டிலேயே எளிய முறையில் கேரட் வைத்து, முட்டை சேர்க்காமல் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- மைதா – 3/4 கப்
- கோதுமை மாவு – 1/4 கப்
- துருவிய கேரட் – 1/2 கப்
- தயிர் – 3/4 கப்
- ஆலிவ் ஆயில் – 1/4 கப்
- பால் – 2 1/2 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை – 1/2 கப்
- வெனிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்
- ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
- பேக்கிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்
- பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்
- உப்பு – 1/4 டீஸ்பூன்
- வால்நட்ஸ் – ஒரு கையளவு
செய்முறை:
- வால்நட்ஸை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
- முதலில் மைதா, கோதுமை, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து, சல்லடைக் கொண்டு சலித்துக் கொள்ள வேண்டும்.
- பின் ஒரு பௌலில் தயிர், பால், சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும்.
- பின்பு அதில் ஏலக்காய் பொடி, வெனிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் துருவிய கேரட், சலித்து வைத்துள்ள மாவை சேர்த்து, வால்நட்ஸை பொடியாக வெட்டிப் போட்டு, கட்டி சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும்.
- பின்னர் மைக்ரோ ஓவனை 182 டிகிரியில் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும்.
- அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை சிறிது தூவி, பின் அதில் கேக் கலவையை ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 20-25 நிமிடம் பேக் செய்ய வேண்டும்.
- அடுத்து கேக் நன்கு வெந்து விட்டதா என்று டூத்பிக் கொண்டு குத்திப் பார்க்கும் போது, டூத்பிக்கில் மாவு ஒட்டினால், மீண்டும் ஓவனில் வைத்து 5-10 நிமிடம் பேக் செய்து இறக்க வேண்டும்.
- இறுதியில் ஓவனில் இருந்து எடுத்த உடனேயே ஒரு ஈரமான துணியில் அதனை 15 நிமிடம் வைத்து, பின் அதனை ஒரு தட்டில் குப்புற தட்டி, அதன் மேல் உள்ள பட்டர் பேப்பரை எடுத்து, 1 மணி நேரம் கழித்து, கத்தியால் துண்டுகளாக்கினால், முட்டை சேர்க்காத கேரட் கேக் ரெடி !