ஆரோக்கியம்புதியவை

உற்சாகமாக வாழ இந்த ஆசனம் செய்யுங்க

இன்றைய சூழ்நிலையில் உலகில் பெரும்பாலான மனிதர்கள் வாழ்வில் உற்சாகமில்லை. உல்லாசமாக வெளியில் செல்ல வழியுமில்லை. வைரஸ்சினால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் மனிதர்கள் மனதில் அச்சம் உள்ளது.



ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். மனிதனிடம் நிறைய பணமிருக்கின்றது. உல்லாசமாக எங்கு வேண்டுமானாலும் அவனால் செல்ல முடியும். ஆனால் உடலில் ரத்த அழுத்தம், நீரிழிவு, அல்சர், மூலம், முதுகு வலி, மூட்டு வலி அதிகமாக உள்ளது. எங்கும் செல்ல மாட்டார்.

ஒவ்வொரு நோய்க்கும் மாத்திரை சாப்பிட்டுக் கொண்டு பயத்துடனேயே வாழ்வார். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உற்சாகத்துடன் வாழலாம். அதற்கு ஒரே வழி மாமுனி பதஞ்சலி மகரிஷி அருளிய அஷ்டாங்க யோகக்கலை ஒன்றுதான்.



வாழ்வில் ஒவ்வொரு தனி மனிதனும் உடல், மன ஆரோக்கியத்திற்கு முக்கிய கவனம் செலுத்தி, யோகாசனமும், ஒழுக்க வாழ்வும் வாழ்ந்தால் வைரஸ் ஓடி விடும்.

நமது சித்தர்கள் அளித்த யோகக்கலையை தினமும் பயின்றால் உலகில் எல்லா மனிதர்களும் நல் எண்ணத் துடனும், ஆரோக்கியமாகவும் வாழலாம்.

ஒவ்வொரு மனிதனும் உற்சாகமாக வாழ அவனது உடலில் ராஜ உறுப்பான இதயம், நுரையீரல், சிறு குடல், பெருங்குடல், சிறுநீரகம் நன்றாக இயங்க வேண்டும். அதற்கு ஜூலாசனம் தினமும் பயிலுங்கள்.



கைகளை தலைக்கு பின்னால் வைக்கவும் மூச்சை இழுத்துக் கொண்டே கால்களையும், கைகளையும் இடுப்புக்கு மேல் உயர்த்தவும்.

இரு கைகளால், கால் பெரு விரலை பிடித்து உடலை ஒரு ஊஞ்சல் போல் நிறுத்தவும். சாதாரண மூச்சில் பத்து வினாடிகள் இழுக்கவும். பின் மெதுவாக கை-கால்களை தரைக்கு கொண்டு வரவும், பத்து வினாடிகள் ஓய்வெடுக்கவும்.

இதே போல் மூன்று முறை பயிற்சி செய்யவும்.

குறிப்பு:- முதலில் பயிற்சி செய்பவர்கள், எடுத்தவுடன் கைகளால் கால் விரலை பிடிக்க முடியாது. முடிந்த அளவு பயிற்சி செய்து அதில் பத்து வினாடிகள் இருக்கவும் ஓரிரு மாதத்தில் முழுமையான நிலை கிட்டும்.



உடலில் இதயம் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், முதுகு வலி உள்ளவர்கள் செய்ய வேண்டாம். நேரடியாக யோகாசன வல்லுநரின் நேரடிப் பார்வையில் செய்யவும்.

இதயம்- நுரையீரல்:- இதயம் மிகச் சிறப்பாக இயங்கும். இதய வால்வு அடைப்பு ஏற்படாது. நுரையீரல் மிகச் சிறப்பாக இயங்கும். அடிக்கடி சளி பிடிக்காது.

மூலம்:- ரத்த மூலம் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். உடலின் அதிக சூடு சமப்படும். குடல் சூடு நீங்கும்.

சிறுநீரகம்:- சிறுநீரகம், சிறுநீரகப்பை நன்றாக பிராண ஆற்றல் பெற்று இயங்கும். கற்கள், கழிவுகள் தங்காது. காய்ச்சல், கால் பாத வீக்கம் வராது, நோய் எதிர்ப்பாற்றல் பெருகும்.

மாணவர்களுக்கு உற்சாகம்:- மந்தமாக சில மாணவர்கள் இருப்பார்கள். இந்த ஆசனம் செய்தால் நல்ல சுறுசுறுப்பாக மாறி விடுவார்கள். காரணம் மூளை செல்களுக்கு நல்ல ரத்த ஓட்டம் பாயும். நன்கு பசி எடுக்கும்.



நரம்பு மண்டலம்:- நரம்பு பலவீனத்தை நீக்கும். நரம்பு மண்டலம் நன்றாக இயங்கும்.

இடுப்பு வலி:-இடுப்பு எலும்பு திடப்படும். இடுப்பு வலி நீங்கும். பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அதிக இடுப்பு வலி வராமல் தடுக்கும்.

குடல் இறக்கம்:- இந்த ஆசனம் செய்தால் குடல் இறக்கம் வராமல் வாழலாம். வந்தாலும் இந்தப் பயிற்சி செய்தால் விரைவில் பலன் கிடைக்கும். வலி உள்ளவர்கள் யோகாசன ஆசிரியரின் நேரடிப் பார்வையில் பயிற்சி செய்யவும்.

ஆண்களுக்கு விரைவீக்கம்:- ஆண்களுக்கு விரைவீக்கம், வலி வராமல் வாழலாம். வந்தாலும் இந்த ஆசனத்தை முறையாக பயிலுங்கள் விரைவில் குணமாகும்.



மாதவிடாய் சம்மந்தமான பிரச்சினை தீரும். அதிக வெள்ளைப்படுதல், மனஅழுத்தம், வயிற்றுவலி, அதிக உதிரம் கொட்டுதல், நீங்கும். உடல் பருமன் அதிகமாகாமல் சிற்றிடையுடன் வாழலாம். திருமணமாகி குழந்தை பிறந்தாலும் அழகாகவும், இளமையுடனும் வாழலாம்.

மலச்சிக்கல்:- மலச்சிக்கல் வராமல் தடுக்கும். குடலிலும், மலக்குடலிலும் கழிவுகள் தங்காது. அதனால் நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.

நீரழிவு:- கணையம் மிகச்சிறப்பாக இயங்கும். பீட்டா செல்கள் நன்றாக இயங்கச் செய்கின்றது. அதனால் நீரழிவு நோய் வராமல் வாழலாம். வந்தாலும் இந்த ஆசனத்தை தொடர்ந்து பயின்றால் கட்டுக்குள் வரும்.



கழுத்துவலி:-கழுத்து தசைகள் இறுக்கம் நீங்கும். கழுத்து எலும்பு திடப்படும். கழுத்து எலும்புவலி, தசைவலி வராமல் வாழலாம்.

முதுகு:- முதுகு வலி வராது. அடிமுதுகுவலி வராமல் வாழலாம். முதுகுத்தண்டை திடப்படுத்துகிறது. முதுகு எலும்பு திடமாக இருக்கச் செய்வதால் சுறு சுறுப்பாக உற்சாகமாகவும் வாழலாம்.

வாயு பிரச்சினை:- இந்த ஆசனம் செய்வதால் குடல் சுத்தமாகும். நல்ல பசி எடுக்கும். அபான வாயு உடலில் சரியாக வெளி யேறும். வாயுபிரச்சினை வராது.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker